உலக அரங்கில் தடகளப் போட்டியில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் நீரஜ்சோப்ரா. இவர் கடந்தாண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதககம் வென்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தார். தற்போது, அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்.




இந்த நிலையில், வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ்சோப்ராவிற்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, நாளை மறுநாள் தொடங்க உள்ள காமன்வெல்த் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைத் தேடித்தந்த நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் உலகளவில் தலைசிறந்த வீரர் ஆவார்.


மேலும் படிக்க : Commonwealth Games 2022: காமன்வெல்த் போட்டிகளில் இந்தியர்களின் போட்டிகள் எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி?


இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் வரும் 28-ந் தேதி( நாளை மறுநாள்) காமன்வெல்த் போட்டிகள் தொடங்க உள்ளது. உலகளவில் ஒலிம்பிக போட்டிக்கு பிறகு மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக பார்க்கப்படும் இந்த தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்றால் கண்டிப்பாக இந்தியாவிற்கு பதக்கம் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் காயத்தால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஆகும்.




நடப்பு காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகள் பங்கேற்கின்றன. ஒலிம்பிக் போட்டியுடன் ஒப்பிடும்போது ஒவ்வொரு காமன்வெல்த் போட்டியிலும் இந்தியா அபாரமாகவே செயல்பட்டு வருகிறது. கடந்த ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ்சோப்ரா காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் கொடியை ஏந்தி இந்திய அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தருணத்தில் அவர் காயத்தால் விலகியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் படிக்க :  Sneha Deepti : குழந்தை பிறந்த பிறகு ஆடிய முதல் பெண் என்று சாதிப்பேன்..! இந்திய வீராங்கனை ஸ்நேகா தீப்தி நம்பிக்கை


மேலும் படிக்க : Lovlina Borgohain on Twitter: ஒலிம்பிக் பதக்கம் வென்ற லோவ்லினா வைத்த குற்றச்சாட்டும்.. அரசின் நடவடிக்கையும்.. அதிர்ச்சி சம்பவம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண