காமன்வெல்த் போட்டிகள் வரும் 28ஆம் தேதி முதல் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாமில் தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்தச் சூழலில் இந்தியர்கள் யார் யார்? எப்போது களமிறங்குகின்றனர் தெரியுமா?


 


இந்தியா ஆடவர் ஹாக்கி அணி: 


ஜூலை 31- இந்தியா vs கானா


ஆகஸ்ட்-1- இந்தியா  vs இங்கிலாந்து


ஆகஸ்ட்-3-இந்தியா  vs கனடா


ஆகஸ்ட்-4-இந்தியா  vs வேல்ஸ்


 


இந்திய மகளிர் ஹாக்கி அணி:


ஜூலை 29- இந்தியா vs கானா


ஜூலை 30- இந்தியா  vs வேல்ஸ்


ஆகஸ்ட்-2-இந்தியா  vs இங்கிலாந்து


ஆகஸ்ட்-3-இந்தியா  vs கனடா


 


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பிர்மிங்ஹமில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் முதல் முறையாக பங்கு பெற்றுள்ளது. இந்திய மகளிர் அணியின் அட்டவணை:


ஜூலை 29- இந்தியா vs ஆஸ்திரேலியா


ஜூலை 31- இந்தியா  vs பாகிஸ்தான்


ஆகஸ்ட்-3-இந்தியா  vs பார்பேடாஸ்


ஆகஸ்ட்-6- அரையிறுதிப் போட்டி


ஆகஸ்ட்-7- இறுதிப் போட்டி


 


மல்யுத்த போட்டிகள்:


காமன்வெல்த் போட்டிகளில் மல்யுத்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் 12 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.


 


குத்துச்சண்டை போட்டிகள்:


குத்துச்சண்டை போட்டிகள் வரும் ஜூலை 30ஆம் தேதி தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் 12 வீரர், வீராங்கனைகள் களமிறங்க உள்ளனர். 


 


பேட்மிண்டன் போட்டிகள்:


காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டிகளில் ஜூலை 29ஆம் தேதி கலப்பு இரட்டையர் போட்டிகளும், ஆகஸ்ட் 3ஆம் தேதி ஒற்றையர் போட்டிகளும் தொடங்க உள்ளன. 


 


தடகள போட்டிகள்:


காமன்வெல்த் போட்டிகளில் தடகள போட்டிகள் வரும் ஜூலை 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் நீரஜ் சோப்ரா, அவினாஷ் சேபிள், முரளி ஸ்ரீசங்கர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 


நேரலை:


காமன்வெல்த் போட்டிகள் அனைத்தும் சோனி நெட்வோர்க் செனலில் நேரலையில் வர உள்ளது. அத்துடன் இவை அனைத்தையும் சோனி லிவ் செயலியில் நேரடியாக காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண