மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்று 3 தங்கம், 1 வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினார் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2006 மெல்போர்ன் காமன்வெல்த் கேம்ஸ், அதே போட்டியில் குழு பிரிவில் தங்கம் வென்றார் சரத் கமல். 2010 டெல்லி காமன்வெல்த், 2018 கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் ஆகிய போட்டிகளில் தங்கம் வெனறார். இந்த ஆண்டு பிர்பிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர், ஆடவர் குழு, கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார் சரத் கமல்.
2014 கிளாஸ்கோ ஆடவர் இரட்டையர் பிரிவிலும், 2018 கோல்டுகோஸ்ட் ஆடவர் இரட்டையர் பிரிவிலும், பிர்பிங்ஹாம் ஆடவர் இரட்டையர் பிரிவு டேபிள் டென்னிஸிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார் சரத் கமல்.
இதுதவிர 2010 டெல்லி காமன்வெல்த் போட்டியில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலம், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
சரத் கமல் 4 வயதில் இருந்தபோது டேபிள் டென்னிஸை அவரது தந்தை அறிமுகப்படுத்தினார். சரத் கமலின் தந்தையும், அவரது உறவினர் முரளிதர் ராவும் ஆட்ட நுணுக்கங்களை சரத் கமலுக்கு கற்றுக் கொடுத்தார்.
அப்போது முதல் சிறப்பாக விளையாடத் தொடங்கினார் சரத் கமல்.
விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்காக மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது. இந்த விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் வென்றுள்ளனர். மொத்தம் 25 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதை வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.
தடகளப் பிரிவில் சீமா புனியா, எல்தோஸ் பால், அவினாஷ், முகுந்த் சப்லே ஆகியோருக்கும், பேட்மின்டனில் லக்ஷயா சென், பிராணாய் எச்.எஸ். ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளது. குத்துச் சண்டையில் அமித், நிகத் ஜரீன், செஸ்ஸில் பக்தி பிரதிப் குல்கர்னி, பிரக்ஞானந்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
துரோணாச்சார்யா விருது
துரோணாச்சார்யா விருதுக்கு வில்வித்தைக்கு ஜிவான்ஜோத் சிங் தேஜா, குத்துச்சண்டைக்கு முகமது அலி காமர், பாரா ஷூட்டிங்கிற்கு சுமா சித்தார்த் ஷிருர், மல்யுத்தத்தில் சுஜீத் மான் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருது வழங்கி மத்திய அரசு கெளரவிக்கிறது.
வாழ்நாள் சாதனையாளர்
வாழ்நாள் சாதனையாளராக கிரிக்கெட்டில் தினேஷ் ஜவஹர் லேடு, கால்பந்தில் விபல் பிரஃபுல்லா கோஷ், மல்யுத்தத்தில் ராஜ் சிங் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
IPL 2023 Retention LIVE: பொல்லார்டை தக்க வைக்குமாறு மும்பை?
வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது
அஸ்வின அக்கஞ்சி (தடகளம்), தரம்வீர் சிங் (ஹாக்கி), பி.சி.சுரேஷ் (கபடி), நிர் பஹதூர் குருங் (பாரா அத்லெடிக்ஸ்) ஆகியோருக்கு இந்த விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.
ராஷ்ட்ரிய கேல் ப்ரோஸ்தஹன் புரஸ்கர் விருது
டிரான்ஸ்டடியா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, லடாக் ஸ்கி அண்டு ஸ்னோபோர்டு அசோசியேஷன் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
மெளலானா அபுல் கலாம் ஆசாத்
மெளலானா அபுல் கலாம் ஆசாத் விருதுக்கு அமிர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் கைகளால் இந்த விருதை விளையாட்டு வீரர்கள் பெறவுள்ளனர்.