தேசிய விளையாட்டு போட்டிகள் தற்போது குஜராத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். நேற்று போல் வால்ட் விளையாட்டில் ரோஸி மீனா பால்ராஜ் புதிய தேசிய சாதனை செய்தார். அதேபோல் பளுதூக்குதலில் 73 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.அஜித் புதிய தேசிய சாதனைப் படைத்தார்.
இந்நிலையில் இன்று தடகளத்தில் மகளிருக்கான 4*400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வீராங்கனைகள் தொடக்கம் முதலே சிறப்பாக ஓட தொடங்கினர். இறுதியில் தமிழ்நாடு வீராங்கனைகள் 3.35.32 என்ற நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றனர். இரண்டாவது இடத்தை 3.35.86 என்ற நேரத்தில் கடந்து ஹரியானா வீராங்கனைகள் பிடித்தனர். மூன்றாவது இடத்தை 3.36.50 என்ற நேரத்தில் கர்நாடக வீராங்கனைகள் பிடித்தனர்.
முன்னதாக நேற்று நடைபெற்ற நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜெஸ்வின் ஆல்டரின் 8.26 மீட்டர் நீளம் தாண்டினார். இதன்மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். மேலும் அவர் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற 8.25 மீட்டர் நீளம் தாண்ட வேண்டும். அதை நேற்று ஜெஸ்வின் ஆல்டரின் கடந்து தகுதியை பெற்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 73 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த என்.அஜித் பங்கேற்றார். சிறப்பாக செயல்பட்ட அஜித் க்ளின் அண்ட் ஜெர்க் பிரிவில் 174 கிலோ எடையை தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார். அத்துடன் மொத்தமாக க்ளின் அண்ட் ஜெர்க் மற்றும் ஸ்நாட்ச் பிரிவில் மொத்தமாக சேர்த்து இவர் 315 கிலோ எடையை தூக்கினார். இதன்மூலம் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். தேசிய விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு தற்போது வரை 12 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் வென்று 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:டேபிள் டென்னிசில் 9ம் நிலை வீரரை வீழ்த்திய சத்யன்..! ஜெர்மனியை வென்று இந்தியா அசத்தல்..!