இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி அசாம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.


இந்திய அணி முதல் 7 ஓவர்களின் முடிவில்  விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் 8வது ஓவர் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் வீச வந்தார். அப்போது களத்தில் பாம்பு ஒன்று புகுந்ததை வீரர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் நடுவருக்கு அது தொடர்பாக தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து பாம்பை பிடிக்க வெளியே இருந்து மைதான ஊழியர்கள் வந்தனர். 


 






பாம்பை அவர்கள் பத்திரமாக பிடித்து சென்ற பிறகு போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது. சற்று முன்பு வரை இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.









அக்டோபர் 6- முதல் ஒருநாள் போட்டி


அக்டோபர் 9- இரண்டாவது ஒருநாள் போட்டி


அக்டோபர் 11- மூன்றாவது ஒருநாள் போட்டி


இந்த ஒருநாள் தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 2 பயிற்சி போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அதன்பின்னர் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.