மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் நேற்று இரவு நவராத்திரி விழா மற்றும் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டும்,  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள மடப்பள்ளியின் அருகேயுள்ள அறையில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது. 






இதனையடுத்து அருகில் உள்ள பக்தர்கள் அவசரவசரமாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தும் சிறிது நேரம் தாமதமான நிலையில்  தீப்பரவ தொடங்கியது. 

தீவிபத்து காரணமாக அறையில் உள்ள புத்தகங்கள் மற்றும் புகைப்படங்கள்  கோவிலுக்கு சொந்தமான மரப்பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தன. கோவில் பணியாளர்கள் முதற்கட்டமாக தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் அணைக்க முடியாத நிலையில் தீ மளமளவென பரவ தொடங்கியது. தொடர்ந்து மேலூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 



இதனிடையே தீ விபத்து குறித்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி. மாவட்ட ஆட்சியர் அணிஷ்சேகர், மதுரை எஸ்.பி சிவபிரசாத் , மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், திருக்கோயில் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். நல்வாய்ப்பாக பக்தர்கள் அனுமதிக்கப்படாத இடத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.





 

முதற்கட்டமாக மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருகின்றனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவில்களில் தீ தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்ட நிலையிலும் கோவில் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள

 

 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.