உலக குழு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் சத்யன் ஞானசேகரன் தலைமையிலான இந்திய ஆடவர் அணி பங்கேற்றுள்ளது. இந்திய அணியின் அனுபவ வீரர் சரத் கமல் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் சத்யன், மானவ் தாக்கர், ஹர்மித் தேசாய் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி களமிறங்கியுள்ளது. 


இந்நிலையில் இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று இந்திய அணி பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் சத்யன் உலக தரவரிசையில் 36வது இடத்தில் உள்ள தூடா பெணிடிக்டை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியை 11-13,4-11,11-8,11-4,11-9 என்ற கணக்கில் வென்றார். 


 






அடுத்து நடைபெற்ற உலக தரவரிசையில் 9வது இடத்திலுள்ள கியூ டங் 11-7,11-9,11-13,11-3 என்ற கணக்கில் வென்றார். இதைத் தொடர்ந்து இந்திய அணியின் மானவ் தாக்கர் ஜெர்மனியின் வால்தர் ரிகார்டோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் 13-11,6-11,11-8,12-10 என்ற கணக்கில் போராடி வென்றார். இதன்காரணமாக இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்று இருந்தது.


அடுத்து உலக தரவரிசையில் 9வது இடத்திலுள்ள கியூ டங்கை எதிர்த்து தரவரிசையில் 37வது இடத்திலுள்ள சத்யன் விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் இரண்டு கேமை கியூ டங் 12-10, 11-7 என்ற கணக்கில் வென்றார். இதன்பின்னர் 2-0 என பின் தங்கியிருந்த சத்யன் ஞானசேகரன் சுதாரித்து கொண்டு விளையாடினார். அடுத்த மூன்று கேமில் சிறப்பாக செயல்பட்டார். 3வது கேமை 11-8 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் 4வது கேமை 11-8 என வென்றார். 


 






இதன்காரணமாக இரு வீரர்களும் தலா 2-2 என்ற சமனாக இருந்தனர். அப்போது 5வது கேமில் இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர். இந்த 5வது கேமை சத்யன் 11-9 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் இந்திய அணி பலம் வாய்ந்த ஜெர்மனி அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 




மேலும் படிக்க: 8 ஆண்டு தேசிய சாதனையை 8 நொடிகளில் முறியடித்த தமிழக வீராங்கனை.. கம்பு ஊன்றித் தாண்டுதலில் தங்கம் வென்ற ரோஸி!