மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய குத்துசண்டை சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தோல்வியை சந்தித்துள்ளார். துபாயில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம், கசகஸ்தான் வீராங்கனை நஜிம் ஜைபேவிடம் தோல்வியை சந்தித்தார். தங்க பதக்கம் யாருக்கு என தீர்மானிக்கும் இந்த இறுதி ஆட்டத்தில் கசகஸ்தான் வீராங்கனை நஜிம் ஜைபே தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள மேரி கோம் 2-3 என்ற கணக்கில் தோல்வியுற்றார்.






இறுதி போட்டியின் துவக்க சுற்றில் மேரி கோம் சிறப்பாக துவங்கினார், நஜிம் ஜைபேவின் தாக்குதலை சிறப்பாக கவுண்ட்டர் செய்து முதல் சுற்றை கைப்பற்றினார், ஆனால் அடுத்தடுத்த சுற்றுகள் அனைத்திலுமே நஜிம் கை ஓங்கியது. தொடக்க சுற்றில் கிடைத்த முன்னடைவை தக்க வைக்க மேரி கோம் தவறினார், அதன் பிறகு தொடர் தாக்குதலையும் நஜிம் ஜைபேவிடம் இருந்து வாங்கிய மேரி கோமால் வெற்றி பாதைக்கு திரும்ப முடியவில்லை. இறுதியில் 2-3 என்ற கணக்கில் ஆசிய குத்துசண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோல்வியுற்ற மேரி கோம் வெள்ளி பதக்கத்தை வென்றார்.


மேலும் அறிய : இந்திய அணியின் புதிய ரெட்ரோ ஜெர்சி - அசத்தல் லுக்கில் புஜாரா!


அதே நேரம் இரண்டு முறை உலக சாம்பியனான ஜைபே தங்க பதக்கத்தை வென்றார். பரிசு தொகையாக ஜைபேவிற்கு 10000 டாலர் வழங்கப்பட்ட நிலையில், மேரி கோம் 5000 டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.