இந்திய அணி வருகிற ஜூன் 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தியாவின் பழைய கால டெஸ்ட் ஜெர்சி எப்படி இருக்குமோ, அதே போன்ற வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறும் இறுதி போட்டியில் களமிறங்கும் இந்திய அணி இந்த ரெட்ரோ ஜெர்சியை தான் அணிய உள்ளனர்.


இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சேத்தேஸ்வர் புஜாரா, இந்திய அணியின் ரெட்ரோ ஜெர்சியை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


 






தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "புதிய சீருடை வந்துவிட்டது, இதை அணிந்துகொண்டு களத்தில் இறங்கும்வரை காத்திருக்க பொறுமையில்லை" என புஜாரா பதிவிட்டுள்ளார்.


மேலும் அறிய : ”இந்த 2 வீரர்கள் கூட விளையாட முடியாமல் போயிடுச்சே” - சச்சின் டெண்டுல்கர் வருத்தம்!


மேலும் மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜா, இந்திய டெஸ்ட் அணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ரெட்ரோ ஸ்வெட்டரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து போன்ற குளுமை மிகுந்த நாடுகளில் போட்டிகளில் விளையாடும்போது, வீரர்கள் களத்தில் ஜெர்சியின் மீது ஸ்வெட்டர் அணிந்து போட்டிகளில் விளையாடுவது வழக்கம். 






ட்விட்டரில் ரெட்ரோ ஸ்வெட்டர் அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ள புஜாரா "90களுக்கு செல்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்த புதிய சீருடைகளில் ஐசிசி டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இறுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய சீருடை இந்திய ரசிகர்கள் பலருக்கு பழைய கிரிக்கெட் நினைவுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிக விரைவில் இவர்கள் அனைவரும் இங்கிலாந்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.