ஃபின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். கேஷோர்ன் வால்காட் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோரை விட 86.69 மீட்டர் தூரம் எறிந்து சோப்ரா முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். 


ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரா சோப்ரா, பின்லாந்தில் நடந்த குர்டேன் விளையாட்டுப் போட்டியில், தனது முதல் முயற்சிலேயே 86.69 மீ தூரம் எறிந்து முன்னிலை பகித்தார். தொடர்ச்சியாக தனது இரண்டாவது முயற்சியில் சற்று பின் தங்கினார். நீரஜ் தனது மூன்றாவது முயற்சியின்போது, ஈரமான பாதையில் ஓடிவந்து தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து, மீதமுள்ள இரண்டு சுற்றுகளில் இருந்து விலகினார். 






இருப்பினும், நீரஜ் தனது முதல் முயற்சிலேயே 86.69 மீட்டர் தூரம் எறிந்து முன்னிலை வகித்ததால் தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினார். நீரஜை தொடர்ந்து, டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த கேஷோர்ன் வால்காட் 86.64 மீ தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், கிரெனடாவின் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீ எறிந்து வெண்கல பதக்கமும் வென்றனர். 






இந்த வார தொடக்கத்தில் டோக்கியோ 2022 தொடரில் தங்கம் வென்ற பிறகு, நீரஜ் சோப்ரா பின்லாந்தில் நடந்த பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனையை படைத்தார். கடந்த ஆண்டு பாட்டியாலாவில் 88.07 மீ தூரம் எறிந்து தனது முந்தைய சாதனையையும் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நீரஜ் சோப்ரா அடுத்ததாக ஜூன் 30-ம் தேதி ஸ்டாக்ஹோமில் நடக்கும் டயமண்ட் லீக் போட்டியில் பங்கேற்க உள்ளார். யூஜின், ஓரிகானில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் (ஜூலை 15-24) அதைத் தொடர்ந்து பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (ஜூலை 28-ஆகஸ்ட் 8) நடைபெறும் தொடரிலும் பங்கேற்க இருக்கிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண