கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி:


ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா, மிசோரம், சண்டிகார், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது


கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டுகள் போல நாட்டின் மற்ற விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 20ஆம் தேதி பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 


தங்கம் வென்ற தமிழக வீரர்கள்:


அந்த வகையில், இன்று நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோகுல் பாண்டியன் தங்கம் வென்றார். அதேபோல்,உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை அலைஸ் தேவா பிரசன்னா. மகளிர் 1000 மீட்டர் sprintmedleyrelay போட்டியில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வென்ற அசத்தியது. 


முன்னதாக, இன்று நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் அணியும்  தமிழ்நாடு பெண்கள் அணியும் தங்கம் வென்று அசத்தியது. ஆண்கள் அணி 86 - 85 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்று அசத்தியது. அதேபோல் மகளிர் பிரிவில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி 70 - 66 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: Virat Kohli: ஐசிசி விருது... நான்காவது முறையாக தட்டிச் சென்ற 'ரன் மிஷின்' விராட் கோலி!


மேலம் படிக்க: IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!