ஐசிசி ஒருநாள் விருது:


ஒவ்வொரு ஆண்டும் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஐசிசி விருது வழங்கி கெளரவித்து வருகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி பெற்றிருக்கிறார். 


 


நான்காவது முறை:


இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இதற்கு முன்னர் கடந்த 2012, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் ஐசிசியின் ஒரு நாள் போட்டிகளின் சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார். முன்னதாக, தென்னாப்பிரிக்க வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தான் உலக அளவில் அதிக முறை ஐசிசி விருதை வென்ற வீரராக இருந்தார். தற்போது இந்த சாதனையை விராட் கோலி முறியடித்து நான்காவது முறையாக இந்த விருதை வென்றிருக்கிறார்.


2023-ல் அதிரடி ஆட்டம் ஆடிய கோலி:


2023 ஆம் ஆண்டு ஐசிசியின் சர்வதேச ஒருநாள் உலக் கோப்பை நடைபெற்றது. இந்தியாவில் நடைபெற்ற இந்த உலக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், 95.62 சராசரி மற்றும் 90.31 ஸ்ட்ரைக் ரேட்டுடன்  சதம் விளாசி சர்வதேச அளவில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல், உலக்கோப்பையின் ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி தான் வென்றார். அந்த தொடரில் மொத்தம் 11 இன்னிங்ஸ்கள் விளையாடிய கோலி 765 ரன்களை விளாசினார்.






 


அதன்படி, 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1377 ரன்களை எடுத்துள்ளார். 12 கேட்சுகளை பிடித்துள்ள இவர் 1 விக்கெட்டையும் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் தான் விராட் கோலிக்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிகளின் சிறந்த வீரருக்கான விருதை வழங்கி கெளரவித்துள்ளது ஐசிசி. விராட் கோலி ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.


 


மேலும் படிக்க:IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் - ஜடேஜா... 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!


 


மேலும் படிக்க: Viral Video: மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து கோலி ரசிகர் செய்த செயல்: திகைத்து நின்ற ரோகித்: வீடியோ வைரல்