IND vs ENG: இந்திய அணிக்கு எதிரான ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார் ஜோ ரூட்! விவரம் உள்ளே!

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

Continues below advertisement

 

Continues below advertisement

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில், 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் 246 ரன்களில் சுருண்டது.

முன்னதாக, இன்றைய ஆட்டத்தில் 60 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது இங்கிலாந்து அணி சார்பில் நான்காவது விக்கெட்டிற்கு ஜோ ரூட் களமிறங்கினார்

இந்தியாவிற்கு எதிராக அதிக ரன்கள்:

அதன்படி, ஜானி பேர்ஸ்டோருடன் ஜோடி சேர்ந்தார். அப்போது, அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்த போது ஜோ ரூட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேநேரம், இந்த போட்டியில் 29 வது ரன்னை எடுத்த போது ஆஸ்திரேலிய அணி வீரர் ரிங்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார்.

அதாவது, இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். முன்னதாக கடந்த 1996 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை டெல்லியில் விளையாடினார் ரிக்கி பாண்டிங். அந்த போட்டியில் முதல் டெஸ்ட்டில் 14 ரன்களும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 13 ரன்களும் எடுத்தார்.

அதேபோல், இந்திய அணிக்கு எதிராக கடந்த 2012 ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடியிருக்கிறார். இவ்வாறாக இதுவரை இந்திய அணிக்கு எதிராக மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள ரிக்கிப்பாண்டிங் 54.36 என்ற சராசரியுடம் 8 சதங்கள் மற்றும் 12 அரைசதங்களில் விளாசி மொத்த, 2555 ரன்களை குவித்துள்ளார். இதில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 257 ரன்கள். இச்சூழலில் தான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 2555 ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இன்றைய போட்டியில் 29வது ரன்னை எடுத்த போது ஜோ ரூட் சமன் செய்திருக்கிறார். முன்னதாக, ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிராக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இதில், 9 சதம் மற்றும் 10 அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க: ICC T20I Player of the Year 2023: ஐசிசி 2023 டி20 விருது.. இரண்டாவது முறை.. உலக சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

 

மேலும் படிக்க: India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola