ஓமனில் நடந்த ஜூனியர் ஹாக்கி ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியுள்ளது.


ஐந்தாவது முறை சாம்பியன்:


புதன்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது .இந்தியா சார்பில் அரிஜித் ஹண்டல் சிங் அதிகபட்சமாக நான்கு கோல்களையும், தில்ராஜ் சிங் ஒரு கோலையும் அடித்தார்.இந்தப் போட்டியில் இந்தியா வெல்லும் ஐந்தாவது பட்டம் இதுவாகும்.


இறுதிப்போட்டி:


ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய பாகிஸ்தான் 3வது நிமிடத்தில் ஷாஹித் அடித்த பீல்டு கோலால் முன்னிலை பெற்றது.ஆனால், 4-வது நிமிடத்தில் ஹண்டலின் டிராக் ஃபிளிக் மூலம் இந்தியா 1-1 என சமன் செய்தது.பின்னர், 18வது நிமிடத்தில் கிடைத்த இரண்டாவது பெனால்டி கார்னரை ஹண்டால் கோலாக மாற்றினார்.


இதற்கிடையில், தில்ராஜ் அடித்த அற்புதமான ஃபீல்ட் கோலால் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது.30வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை சுஃபியன் கோலாக மாற்ற, பாகிஸ்தான் அணி 2-3 என முன்னிலை பெற்றது. 39வது நிமிடத்தில் சுஃபியான் மற்றொரு பெனால்டி கார்னரை கோலாக மாற்றி பாகிஸ்தானுக்கு சமன் செய்தார்.


இதையும் படிங்க: Pushpa 2 Twitter Review: நெருப்பா இல்ல ரெடி மேட் அடுப்பா! புஷ்பா 2 தப்பித்ததா? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்!


வெற்றி கோல் அடித்த ஹண்டால்:


47வது நிமிடத்தில் இந்தியாவிற்கு மூன்றாவது பெனால்டி கார்னர் கிடைத்தது, ஆனால் ஹண்டால் அடித்த பந்தை கோல் கீப்பர் முஹம்மது ஜான்ஜுவா தடுத்து காப்பாற்றினார்.இருப்பினும், சில வினாடிகளுக்குப் பிறகு ஹண்டால் மற்றொரு பீல்ட் கோலை அடித்து இந்தியாவை மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.கடைசி 10 நிமிடங்களில் இந்தியா பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. சில பெனால்டி கார்னர்களை அடிக்க இறுதியில் ஹண்டால் ஒரு அற்புதமான கோலைப் போட்டு இந்தியாவை 5-3 என்ற கணக்கில் வெற்றிபெறச் செய்தார்.






இந்திய அணி 2004, 2008, 2015, 2023 ஆகிய ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்றது.கோவிட் தொற்றுநோய் காரணமாக 2021 இல் போட்டி நடத்தப்படவில்லை.