அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில், சுனில், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சுகுமார் இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இப்படத்தின்  சிறப்பு காட்சிகள் நேற்று இரவே வெளியான நிலையில் படத்திற்கு அமோக வரவேற்பை கொடுத்து வந்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை கீழே காணலாம். 


இதையும் படிங்க: Pushpa 2 Tragedy: காவு வாங்கிய புஷ்பா! தியேட்டரிலே பறிபோன தாயின் உயிர்! ஐ.சி.யூ.வில் 9 வயது மகன்


டிவிட்டர் விமர்சனம்: 


வெங்கி ரிவ்யூ:


பிரபல தெலுங்கு சினிமா விமர்சகரான வெங்கி ரிவ்யூ இப்படத்துக்கு  #புஷ்பா2 திரைப்படத்தில் முதல் பாதி நன்றாக இருந்தது,இருப்பினும் 2வது பாதி நன்றாக ஆரம்பித்தாலும்  படத்தின் வேகம் இறுதி ஒரு மணி நேரத்தில் அப்படியே குறைகிறது.  புஷ்பா பாகம் ஒன்று எங்கு முடிந்ததோ அங்கிருந்தே படத்தின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது. படத்தின் முதல்  பாதி முழுக்க முழுக்க டிராமா போல செல்கிறது, இது சில நேரங்களில் படம்  சற்று மெதுவாக செல்வது போல உணர்வை தருகிறது, ஆனால் புஷ்பாவின் குணாதிசயங்களும் உரையாடல்களும் நம்மை அதிலிருந்து மறைய வைத்து படத்தை முன்னோக்கி பயணிக்க வைக்கிறது.


இரண்டாம் பாதி நன்றாகத் தொடங்குகிறது, ஜாதரா காட்சி சிறப்பாக வந்தது, ஆனால் இந்த காட்சிக்குப் பிறகு, படம் எந்த நோக்கமும் இல்லாமல் கடைசி ஒரு மணி நேரத்தில் படத்தின் வேகம் குறைந்து, இறுதிவரை இழுத்துச் செல்லப்படுகிறது. இதில் அல்லு அர்ஜுன் மீண்டும் தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்கிறார். மேலும் அவர் ஏன் இந்தியா முழுவதும் உள்ள மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். அவர் எல்லாப் புகழுக்கும் உரியவர்.


படத்தின்  நீளம் மற்றும் கடைசி மணிநேரம் படத்திற்கு மிகப்பெரிய குறைபாடுகள் மற்றும் படத்தின் க்ளைமாக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருந்தால், பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். படம் முழு எதிர்பார்ப்புகளை எட்டவில்லை, ஆனால் இது ஒரு கண்ணியமா கமர்சியல்  படமாக முடிவடைகிறது, அல்லு அர்ஜுனின் அற்புதமான நடிப்பால் நிச்சயம் படத்தை பார்க்க முடியும் என்றும் படத்திற்கு  3/5 மதிப்பெண்ணும் கொடுத்துள்ளார். 






தர்ன் ஆதர்ஷ்:


பிரபல பாலிவுட்  விமர்சகரான தரன் ஆதர்ஷ் புஷ்பா 2 திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் என்று பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் இருவரும் ரசிகர்கள் ஏமாற்றாமல் ஒரு தரமான படைப்பை  கொடுத்துள்ளனர். படத்தின் சண்டை காட்சிகள் படமாக்கிய விதம் அருமையாக இருந்தது என்றும் அனைத்து விருதுகளுக்கும் அல்லு அர்ஜூன் தகுதியானவர் என்றும் படத்தை மிஸ் பண்ணாமல் பாருங்க என்று பதிவிட்டுள்ளார்.






சுமாரான படம்: 


என்ன தான் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஒரு சிலர் படம் சற்று சுமராக உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தில் ஃபகத் ஃபாசிலின் கதாப்பாத்திரம் கார்டூன் தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாம் பாதியில் பல காட்சிகள் இழுவையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.






தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் நேற்றே வெளியான நிலையில் படத்திற்கு சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்த  நிலையில் தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும்  என்பதால் உண்மையான விமர்சனம் விரைவில் வெளிவந்துவிடும்.