டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஞாயிற்றுகிழமையுடன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.  இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீர வீராங்கனைகள் தங்களுடைய நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். இந்தச் சூழலில் ஜப்பான் சாஃப்ட் பால் அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. அந்த அணியைச் சேர்ந்த மியா  கோடோ என்ற வீராங்கனை நகோயா பகுதியைச் சேர்ந்தவர். அவரை பாராட்டும் விதமாக அந்தப் பகுதி மேயர் ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தி இருந்தார். 


அந்த நிகழ்ச்சியில் வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பை பெற்றார். அத்துடன் மியாவிடம் இருந்து தங்கப்பதக்கத்தை வாங்கிய மேயர் டக்காஷி கவமுரா திடீரென அந்த பதக்கத்தை தன்னுடைய பற்களால் கடித்தார். இது மியா கோடோவையும் மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் பலரும் மேயரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது கொரோனா வைரஸ் கட்டுபாடுகள் அமலில் உள்ள நிலையில் அவர் இப்படி செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 




இந்தச் சூழலில் அவருடைய நிலையை அறிந்த டோக்கியோ ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது அந்த பதக்கத்தை மாற்றி தருவதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் அளித்த பேட்டியில்,"மியா கோட்டூவின் பதக்கத்தை நாங்கள் மாற்றி புதிதாக ஒரு தங்கப்பத்தை கொடுக்க உள்ளோம். இதற்கு ஏற்படும் மொத்த செலவை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஏற்கும்" எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த வீராங்கனைக்கு புதிய தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 






மேலும் ஜப்பான் சாஃப்ட் பால் அணியின் ஸ்பான்சராக இருக்கும் டோயோட்டோ மோட்டோ கார்ப் நிறுவனமும் நகோயா மேயரின் செயலை கடுமையாக சாடியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் நடத்திய ஜப்பான் நாட்டிலேயே இந்த விஷயம் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதக்கத்தை உடனடியாக மாற்று கொடுக்க முன்வந்த டோக்கியோ ஒருங்கிணைப்பாளர்களை பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 480 மில்லி கிராமில் ஈட்டி எறியும் தங்கசிலை- நீரஜ் சோப்ராவுக்கு மரியாதை செய்யும் நகை கலைஞர்...!