நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிவேகமாக உயர்ந்ததை அடுத்து மின்சார பைக்கள் விற்பனைக்கு பெரிய அளவிலான வரவேற்பு உண்டானது. இந்த வரிசையில் அண்மையில் ஓலா நிறுவனம் ஈ-பைக்களுக்கான முன்பதிவினை தொடங்கியது. ஓலா நிறுவனமே வடிவமைத்து விற்பனை செய்யும் இந்த ரக ஈ-பைக்கள் விரைவில் சந்தைக்கு வரவிருக்கின்றன. 


இந்த நிலையில் 2040-ஆம் ஆண்டில் நாட்டிலும் சர்வதேச அளவிலும் விற்பனையாகும் வாகனங்களில் மூன்றில் இரண்டு பங்கு வாகனங்கள் மின்சார வாகனங்களாகவே இருக்கும் என ப்ளூம்பெர்க் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு கரியமில கசிவை (net zero emission target) முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டுமென்றால் சாலைப்போக்குவரத்தை சீர்த்திருத்துவதில்தான் அது தொடங்க வேண்டும் என்கிற நிலையில் இந்த ஆய்வினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.






இதன்படி பயண ரக வாகனங்கள் 2020-ஆம் ஆண்டில் 3 மில்லியன் அளவு விற்பனை ஆன நிலையில் 2040-ஆம் ஆண்டில் இவை 66 மில்லியன் அளவுக்கு விற்பனையாகும் எனத் தெரியவந்துள்ளது. இந்த விற்பனையில் ஐரோப்பாவும் சீனாவும் முன்னனியில் உள்ளன. மேலும் சர்வதேச அளவில் மூன்றில் இரண்டு பங்கு வாகனங்கள் விற்பனை மின்சார வாகனங்களாகவே இருக்கும். தற்போதைய சூழலில் ஐரோப்பாவில் பாட்டரியில் இயங்கும் வாகனங்கள் மின்சார சார்ஜில் இயங்கும் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட அதே விலையில்தான் விற்கப்படுகின்றன. மேலும் சந்தையில் பாட்டரிக்களுக்கான டிமாண்டின் காரணமாக அதன் விலையும் சரிந்துள்ளது. கார்கள் மட்டுமல்லாமல் பேருந்துகள், இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பேட்டரி உற்பத்திக்கான போட்டி அதிகரிக்கும். லித்தியம் பேட்டரி உற்பத்தியில்  முன்னணியில் இருக்கும் சீனா இந்த டிமாண்டினால் ஆதாயம் அடையும். 2025-ஆம் ஆண்டுக்குள் அதிக மின்சார வாகன் உற்பத்தி என்னும் தனது இலக்கை எட்ட ஐரோப்பாவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களும் சீனாவுக்கு நிகராக பாட்டரி உற்பத்தியில் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்.


தற்போது பாட்டரி மற்றும் மின்சார சார்ஜ் ரக வாகனங்களில் 500 மாடல்கள் சர்வதேச அளவில் சந்தை விற்பனையில் உள்ளன. 2012-ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு முறை சார்ஜ் செய்யப்படும் மின்சார வாகனம் சுமார் 166 கிமீ தூரம் பயணிக்கும் என்று இருந்த நிலையில் அது தற்போது ஒருமுறை சார்ஜுக்கு சுமார் 359 கிமீ தூரம் என அதிகரித்துள்ளது. சீனா மற்றும் ஐரோப்பாவில் பேட்டரி சார்ஜுக்கான இடங்களும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Car loan Information:

Calculate Car Loan EMI