7 ஆண்டுகளுக்கு பிறகு 36 வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனைகள் முதல் 3 இடங்களை பிடித்து அசத்தியுள்ளனர். அதிலும் குறிப்பாக தேசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கம்பு ஊன்றித் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் 4.20 மீட்டர் தூரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.
மகளிருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில், தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் 4.20 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றா. அதன் பிறகு பவித்ரா வெங்கடேஷ் 4 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கமும், பரணிகா இளங்கோவன் 3.90 மீட்டருடன் வெண்கல பதக்கமும் வென்றனர்.
இதில் சாதனை என்னவென்றால் ரோஸி மீனா பால்ராஜ் 4.20 மீட்டர் தாண்டிய உயரம் ஒரு தேசிய சாதனையாகும். முன்னதாக கடந்த 2014 ம் ஆண்டு வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரத்தை தாண்டியதே முந்தைய சாதனையாக இருந்தது. வி.எஸ். சுரேகா (4.15) செய்த 8 ஆண்டுகால சாதனையை ரோஸி முறியடித்தார்.