கிரிக்கெட் லீக் தொடர்களில் மிகவும் பிரபலமானது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர். ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டாக மாறி வரும் இத்தொடருக்கு உலக கிரிக்கெட் அரங்கில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில், மகளிருக்கான பிரத்யேக ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருக்கிறார். 


மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிபிஎல், ஹண்ட்ரெட் தொடர்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஐபிஎல் தொடரை ஆரம்பிப்பதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, மகளிருக்கான டி20 சாலஞ்ச் தொடரை பிசிசிஐ நடத்தி வருகிறது. 3 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு போதுமான ஸ்பான்சர், விளம்பரம் இல்லாததால், மக்களின் வரவேற்பும் சுமாராகவே இருந்தது.


இந்நிலையில், மகளிர் ஐபிஎல் குறித்து பேசி இருக்கும் ஜே ஷா, “ஐபிஎல் தொடருக்கு நிகரான மகளிர் டி20 லீக் தொடரை தொடங்குவதற்கான வேலைகளில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. மகளிர் டி20 கிரிக்கெட் சாலஞ்ச் தொடருக்கு கிடைத்துவரும் ஆதரவு, அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர உத்வேகம் தருகிறது. மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டாலும், டி20 கிரிக்கெட் சாலஞ்ச் தொடர்ந்து நடத்தப்படும்” என தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க: Watch Video: பந்துவீசிய டிராவிட்... கும்ப்ளேவுக்கு சொன்ன செய்தி என்ன? - வைரல் வீடியோ



நடந்த ஐபிஎல் தொடர், நடக்காத டி20 சாலஞ்ச்


கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால், 2021-ம் ஆண்டு நடக்க இருந்த மகளிர் டி20 சாலஞ்ச் தொடர் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், கொரோனா பொருந்தொற்று காலத்திலும் இரண்டு கட்டங்களாக ஐபிஎல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே, டி.ஒய் பட்டீல் கைதானம், சிசிஐ எனப்படும் கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியா, மற்றும் பூனே கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் வைத்து நடத்தப்படும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண