இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மகளிர் டி20 கிரிக்கெட் லீக்கின் அடிப்படை விலையை ரூ. 400 கோடி (50 மில்லியன் டாலர்) என நிர்ணயித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மகளிர் ஐபிஎல்-இன் முதல் தொடர் 2023 மார்ச்சில் நடத்தப்படவுள்ளது.


கிரிக்கெட் நிர்வாகக் குழு தொடரில் பங்கேற்று விளையாடப்போகும் 5 அணிகளுக்கு டெண்டர் விடும். ​​ஒவ்வொரு அணியின் உரிமையாளருக்கும் அடிப்படை விலை ரூ.400 கோடியாக நிர்ணயிக்கப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.
ரூ.1,000 முதல் ரூ.1,500 கோடி வரை கூட அணிகள் ஏலத்தில் விற்கப்பட வாய்ப்புள்ளது என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.


2007-08 இல் ஐபிஎல் அணிகள் விற்கப்பட்ட விலையுயர்ந்த உரிமையின் மதிப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு கிரிக்கெட் நிர்வாகக் குழு  இந்த மதிப்பை நிர்ணயித்துள்ளது. அந்த நேரத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் விலையுயர்ந்த அணியாக இருந்தது.


மகளிர் ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான முடிவிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொதுக்குழு இந்த ஆண்டு அக்டோபர் 18 அன்று மும்பையில் நடந்த 91வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புதல் அளித்து இருந்தது.


"மகளிர் இந்தியன் பிரீமியர் லீக்கை நடத்த பொதுக்குழு ஒப்புதல் அளித்தது" என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது.


அங்கீகரிக்கப்பட்டதன் அடிப்படையில் மகளிர் ஐபிஎல் தொடரில் 20 லீக் ஆட்டங்கள் இடம்பெறும். இதில் அணிகள் இரண்டு முறை விளையாடும். அதிக ஸ்கோர்கள் பெறும் அணிகள் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் எலிமினேஷன் போட்டியில் விளையாடும். ஒவ்வொரு அணியும் விளையாடும் 11 பேரும் ஐந்து வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களைகளுக்கு மேல் இருக்கக்கூடாது.


ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 18 வீராங்கனைகளைக் கொண்டு இருக்கலாம். அங்கு எந்த அணியிலும் 6 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு மேல் இருக்க முடியாது.


N Jagadeesan Record: விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் அதிக ஸ்கோர்: தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை


பிசிசிஐ மகளிருக்கான ஐபிஎல் உரிமைகள் மற்றும் ஒளிபரப்பு உரிமைகளை மறைமுக ஏலத்தின் மூலம் விற்கப்படும். மின்னணு ஏல முறை நடத்தப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மகளிர் ஐபிஎல் அணிகளை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருவதாகவும் நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக,


2022ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது கால் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அதில் மகாராஸ்ட்ரா அணியும் உத்திரப் பிரதேச அணியும் மோதிக் கொண்டன. அதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஸ்ட்ரா அணி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 220 ரன்கள் குவித்தார். குறிப்பாக போட்டியின் 49 ஓவரில் வீசப்பட்ட ஒரு நோ-பாலுடன் சேர்த்து 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டு ருத்ரதாண்டவமாடினார். 


இரட்டைச் சதம், ஒரே ஓவரில் 7 சிக்ஸர் என இதனுடன் மொத்தம் 5 சாதனைகளை அவர் முறியடித்துள்ளார். 


மகராஸ்ட்ரா அணிக்காக அவர் அடித்த முதல் இரட்டைச் சதம். இரட்டைச் சதம் அடிக்கும் 14வது இந்தியர் இவர்.