திறமையான இளைஞர்களை அடையாளம் காண உதவும் விஜய் ஹசாரே போட்டியில் இந்த எடிஷனில் அதிக ஸ்கோர் விளாசிய வீரராக தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை படைத்தார்.

பிகாருக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 5 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ஜெகதீசன். கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இன்று காலிறுதியில் செளராஷ்டிராவை தமிழ்நாடு எதிர்கொண்டது. அந்த ஆட்டத்தில் ஜெகதீசன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக, ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெகதீசன் 112 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். அந்த ஆட்டத்தில் அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 101.78 வைத்திருந்தார்.
அடுத்து சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் 113 பந்துகளில் 107 ரன்களும், கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 168 ரன்களும் விளாசினார்.

இதையடுத்து, ஹரியானாவுக்கு எதிரான ஆட்டத்தில் 123 பந்துகளில் 128 ரன்களை விளாசி தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் சதம் விளாசி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்திற்கு எதிரான ஆட்டம் ஒன்றில் 141 பந்துகளில் 277 ரன்கள் எடுத்து புதிய சாதனையைப் படைத்தார்.
ஒட்டுமொத்தமாக அவர் இந்தத் தொடரில் அவர் 830 ரன்கள் எடுத்தார். 

லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் படைத்துள்ளார். 

Sanju Samson: தொடர்ந்து ட்ரெண்டிங்; உலகக் கோப்பை கால்பந்து மைதானத்திலும் சஞ்சு சாம்சனுக்கு பெருகும் ஆதரவு!

அதிகபட்ச தனிநபர் லிஸ்ட் ஏ மற்றும் சர்வதேச ஸ்கோர்:

277 - என் ஜெகதீசன் (TN) v அருணாசலம், இன்று
268 - அலிஸ்டர் பிரவுன் (சர்ரே) எதிராக கிளாமோர்கன், 2002
264 - ரோஹித் சர்மா (இந்தியா) எதிராக இலங்கை, 2014
257 - டி'ஆர்சி ஷார்ட் (மேற்கு ஆஸி) எதிராக குயின்ஸ்லாந்து, 2018
248 - ஷிகர் தவான் (இந்தியா ஏ) எதிராக தென்னாப்பிரிக்கா ஏ, 2013

லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனையை தமிழ்நாடு வீரர் நாராயண் ஜெகதீசன் படைத்துள்ளார். இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, தென்னாப்பிரிக்காவின் அல்விரோ பீட்டர்சன் மற்றும் கர்நாடக தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் ஆகியோர் இதற்கு முன்னதாக 50 ஓவர் வடிவத்தில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்துள்ளனர். 

விஜய் ஹசாரே போட்டி வரலாற்றில் இரட்டை சதம் அடித்த ஆறாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ஜெகதீசன் பெற்றுள்ளார். 

1 கர்ண் வீர் கௌஷல் உத்தரகாண்ட் vs சிக்கிம் 6th Oct 2018 202(135)
2 சஞ்சு சாம்சன் கேரளா vs கோவா 12th Oct 2019 212(129)*
3 யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை vs ஜார்கண்ட் 16th Oct 2019 203(154)
4 பிருத்வி ஷா மும்பை vs புதுச்சேரி 25th Feb 2021 227(152)*
5 சமர்த் வியாஸ் சௌராஷ்டிரா vs மணிப்பூர் 13th Feb 2023 200(131)
6 ஜெகதீசன்  தமிழ்நாடு vs அருணாச்சலம் 21th Feb 2023 277(141)