கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 லட்சம் பேர் அந்நாட்டில் திரண்டிருக்கின்றனர். கால்பந்து திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு அந்நாட்டில் ஒட்டகக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருக்கிறது. கொரோனாவால் உலகமே கடந்த 2 ஆண்டுகளாக முடங்கியிருந்தது. 


ஒட்டகக் காய்ச்சால் என்றால் என்ன?
பொதுவாக மத்திய கிழக்கு நாடுகள் பாலைவனம் சார்ந்த பகுதிகள் என்பதால் அங்கு ஒட்டகக் காய்ச்சல் பரவல் காணப்படுவது இயல்பான ஒன்றாக இருக்கிறது. ஒட்டகம் போன்ற விலங்குகளில் இருந்து பரவும் இந்த காய்ச்சலுக்கு மெர்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.


2021ஆம் ஆண்டு முதல் முதலில் பதிவான இந்த மெர்ஸ் காய்ச்சல் காரணமாக இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 900-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். எனவே, மெர்ஸ் தொற்றும் உலகப் பெருந்தொற்றாக பரவும் அபாயம் உள்ளது.


எனவே, கத்தார் உலகக் கோப்பைப் போட்டியை கண்டு ரசிக்கச் சென்றவர்கள் பார்வையாளர்கள் உரிய முன்னெச்சரிக்கையுடன் உணவு, குளிர்பானங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.  மேலும், கத்தார் சுகாதாரத் துறை தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


FIFA Worldcup 2022: ஒரே பாயிண்ட்டில் அணிகள் இருந்தால் அடுத்து என்ன? - உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ரூல் இதுதான்!


இதனிடையே, ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, குரங்கம்மையை இனி எம். பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.


டென்மார்க்கில் 1958-ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒரு வித வைரசால் பாதிப்புக்குள்ளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. 


இந்நிலையில், இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம் பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


குரங்கு அம்மை


குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோசிஸ் (விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்) ஆகும். இது மருத்துவரீதியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், சின்னம்மை நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளைப் கொண்டுள்ளது.


நோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் விதத்தில் வித்தியாசம் இருப்பதாக மருத்துவர்கள் வலியுறுத்தினாலும், சரும அறிகுறி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளால் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.


மழைக்காலத்தில், மக்கள் வைரஸ் தொற்றுகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். சரும அறிகுறி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளுடன், மற்ற நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து சின்னம்மைக்கான அறிகுறிகளை காட்டுகின்றன.


குரங்கு அம்மை பொதுவாக காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, சில சமயங்களில் தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இந்த அனைத்து அறிகுறிகளும் சரும சிவப்பாகுதல் போன்ற பிற பிரச்சனைகளுக்கு, நான்கு நாட்களுக்கு முன்பே தோன்றும். கண் மற்றும் வாய் பகுதியிலிருந்து தொடங்கி, உடல் முழுவதும் பரவுகிறது.