வழக்கமாக ஐ.பி.எல். போட்டிகள் என்றாலே பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமே இருக்காது. பேட்டிங், பவுலிங்கை தாண்டி போட்டியின் நடுவே வீரர்கள் மத்தியில் ஏற்படும் மோதலும் இந்த விறுவிறுப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. அந்த வகையில், நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் வீரர்கள் மோதலுக்கு பஞ்சமே இல்லை என்றே கூறலாம்.


கோலி - நவீன் உல்ஹக் மோதல்:


குறிப்பாக, லக்னோ – பெங்களூர் போட்டியில் ரன்மெஷின் விராட்கோலி - கம்பீர், நவீன் உல் ஹக் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போட்டியில் விராட்கோலி நவீன் உல் ஹக்கிடம் தான் பிட்ச்சின் நடுவே நடக்கவில்லை. என் ஷூவை பார் என்று கூறியதை, நீ எல்லாம் என் காலுக்கு சமம் என்று விராட்கோலி கூறியதாக பலரும் வதந்தியை பரப்பினர். அந்த போட்டியில் விராட்கோலியிடம் நவீன் உல் ஹக் கை குலுக்க மறுத்ததும், அந்த போட்டி முடிந்ததும் கே.எல்.ராகுல் விராட்கோலியிடம் பேச நவீன் உல் ஹக்கை அழைத்தபோது அவர் வர மறுத்துவிட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த சூழலில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கட்டத்திற்கு ஐ.பி.எல். தொடர் வந்துள்ளது. குஜராத் அணி தங்களது வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில், அடுத்த 3 இடத்திற்கு யார் செல்வார்கள்? என்பதை தீர்மானிக்கும் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில், நேற்று முன்தினம் மும்பை – லக்னோ அணிகள் மோதின. இதில், இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு எதிராக 19வது ஓவரை நவீன் உல் ஹக் வீசினார்.






"கத்துங்கள்.. கத்துங்கள்.."


அந்த ஓவருக்கு முன்னதாக அவரை வெறுப்பேற்றும் விதமாக சில ரசிகர்கள், அவரை பார்த்து கோலி. கோலி என்று கத்தி வெறுப்பேற்றினர். எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த அவரை பார்த்து அங்கே இருந்த ரசிகர்கள் சிலர் கோலி.. கோலி.. என்று ஆரவாரம் செய்தனர். ரசிகர்கள் தன்னை சீண்டுவதை அறிந்து திரும்பி பார்த்த நவீன் உல் ஹக் ஏதும் பேசாமல் ‘கத்துங்கள்.. கத்துங்கள்..’ என்பது போல சைகை செய்தார். அந்த போட்டியில் நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரை டிம் டேவிட் வெளுத்து வாங்கினாலும், கடைசி ஓவரை மோஷின்கான் கட்டுக்கோப்புடன் வீசியதால் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. 


தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நவீன் உல் ஹக் இந்த தொடரில் லக்னோ அணிக்காக ஆடி வருகிறார். விராட்கோலியுடனான மோதலுக்கு பிறகு ஆர்.சி.பி. அணிகளின் போட்டியின்போது எல்லாம் விராட்கோலியை சீண்டும் விதமாக சர்ச்சைக்குரிய பதிவுகளை இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். இது விராட்கோலி ரசிகர்களுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், நேற்று விராட்கோலி விளாசிய சதம் நவீன் உல் ஹக், கம்பீருக்கு தக்க பதிலடி என்றும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க: PBKS vs RR IPL 2023: பரிதாப நிலையில் பஞ்சாப்.. ராசியில்லாத ராஜஸ்தான்.. வெற்றி யாருக்கு..?


மேலும் படிக்க: Virat Kohli Century: பேர கேட்டா விசில் அடி.. இது விராட் கோலி.. ஹைதராபாத்தை ஆட்டம் காண வைத்த ஆட்டநாயகன்..!