ஐபிஎல் 16வது சீசனின் 66வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது தரம்சாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் அசோஷியேஷன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


இரு அணிகளும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியும் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இரு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளும் முடிவுக்கு வந்தன. 


இந்த சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இது இரண்டாவது முறையாகும். முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 64 ரன்களும்,  நாதன் எல்லிஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 


பிட்ச் அறிக்கை:


இந்த மைதானத்தில் உள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகள் அதிகளவில் ஸ்விங் ஆகும் என்பதால், இந்த மைதானத்தில் ஸ்கோர் குறைவாகவே பதிவாகும். இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி சேஸிங் செய்து வெற்றி பெறலாம். 


கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்: 


பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) : ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், சாம் குர்ரான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.


ராஜஸ்தான் ராயல்ஸ் : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஜோ ரூட், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.


நேருக்குநேர்: 


இதுவரை இரு அணிகளும் 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வெற்றிபெற்றுள்ளது. 


முழு அணி விவரம்:


பஞ்சாப் கிங்ஸ் அணி:


ஷிகர் தவான் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங், பிரப்சிம்ரன் சிங், சிக்கந்தர் ராசா, மேத்யூ ஷார்ட், ரிஷி தவான், மோஹித் ரதீ, ஹர்பிரீத் சிங் பாட்டியா, பானுகா ராஜபக்சே, பல்தேஜ் சிங், வித்வத் கவேரப்பா, குர்னூர் பிரார், சிவம் சிங்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:


சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், ஜோ ரூட், துருவ் ஜூட்மி, துருவ் ஜுட்மி , ஆடம் ஜம்பா, சந்தீப் ஷர்மா, கே.எம். ஆசிப், யுஸ்வேந்திர சாஹல், தேவ்தத் பாடிக்கல், ரியான் பராக், குல்தீப் யாதவ், டொனாவன் ஃபெரீரா, நவ்தீப் சைனி, டிரென்ட் போல்ட், ஜேசன் ஹோல்டர், முருகன் அஷ்வின், ஆகாஷ் வசிஷ்ட், கே.சி கரியப்பா, ஓபேத் மெக்காய், குல்தீப் சென்காய், பாசித், குணால் சிங் ரத்தோர்