அனுஷ்கா ஷர்மா தனது கணவர் விராட் கோலியுடன் ஜிம்மில் நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதில் விராட் கோலி ஜிம்மில் பஞ்சாபி பாடலுடன் அனுஷ்கா ஷர்மாவுடன் நடனமாடி அசத்தியுள்ளார்.


அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோலியும் மிகவும் பிரபலமான ஜோடிகள். இவர்கள் இருவரும் இணைந்து எப்போதும் வேடிக்கையான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் தங்களது ரசிகர்களை மகிழ்விப்பார்கள். இந்தநிலையில், இன்று காலை அனுஷ்கா ஷர்மா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ROFL வீடியோவை பகிர்ந்தார். அதில், அனுஷ்கா மற்றும் விராட் இருவரும் ஸ்வாக்குடன்  கேமரா முன்னாடி வந்து நடனமாட தொடங்கினர். இருவரும் காலை மடக்கி ஜாலியாக நடனமாடி தொடங்கினர். 


நடனத்தின்போது அனுஷ்கா ஷர்மா வெள்ளை அச்சிடப்பட்ட சட்டை மற்றும் டெனிம் ஜீன்ஸிலும், விராட் கோலி கருப்பு டி ஷர்ட் மற்றும் சாம்பல் நிற பேண்ட்டில் இருக்கிறார். 


நடன இறுதியில் காலில் அடிப்பட்டது போல விராட் கோலி முன்னோக்கி செல்ல, அதனுடன் அனுஷ்கா ஷர்மாவும் தனது நடனத்தை முடித்து கொள்கிறார்.






சமீபத்தில், விராட் மற்றும் அனுஷ்கா பெங்களூரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குடும்பத்துடன் உணவு அருந்தினர். இந்த புகைப்படமும் தனது பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் அனுஷ்கா ஷர்மா. முன்னதாக, விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் 2013ல் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் முதல்முறையாக சந்தித்து நடித்தனர். அதனை தொடர்ந்து இருவரும் நட்பாக பழகி டேட்டிங் செய்ய தொடங்கினர். ஆனால், இதை இவர்கள் ஊடங்களில் வெளிவராதபடி பார்த்து கொண்டனர். நான்கு வருட டேட்டிங்கிற்கு பிறகு, இந்த ஜோடி கடந்த 2017ம் ஆண்டு இத்தாலியில் உறவினர்களில் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது வாமிகா என்ற மகள் உள்ளார். 


இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


இந்த சீசனில் விராட் கோலி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 279 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலிடத்தில் உள்ளார்.