ஐ.பி.எல் 2024:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனில் அதிக சம்பளம் வாங்கும் 10 இந்திய வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
கே.எல்.ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் கே.எல்.ராகுல். இவரை அந்த அணி நிர்வாகம் ரூபாய் 17 கோடிக்கு இந்த சீசனில் தக்க வைத்துள்ளது. அந்தவகையில் 2024 ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றிருக்கிறார்.
ரோகித் சர்மா (மும்பை இந்தியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ரோகித் சர்மா. இவரை மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ரூபாய் 16 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அதன்படி, 2024 ஐபிஎல் சீசனில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது இந்திய வீரராக ரோகித் சர்மா இருக்கிறார்.
ரிஷப் பண்ட் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்டை அந்த அணி நிர்வாகம் ரூபாய் 16 கோடிக்கு இந்த சீசனில் தக்கவைத்துள்ளது. சாலை விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓர் ஆண்டுக்கும் மேல் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பண்ட் இந்த சீசனில் விளையாட உள்ளார்.
ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இவரை சென்னை அணி நிர்வாகம் ரூபாய் 16 கோடிக்கு தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இஷான் கிஷன்(மும்பை இந்தியன்ஸ்)
கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் போது மும்பை அணி இஷான் கிஷனை ரூபாய் 15.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அந்தவகையில் அதே தொகையில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் தக்கவைத்துள்ளது
விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருபவர் விராட் கோலி. அந்த வகையில் விராட் கோலியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூபாய் 15 கோடிக்கு தக்கவைத்துள்ளது.
ஹர்திக் பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் செயல்பட்டவர் ஹர்திக் பாண்டியா. இந்நிலையில் தான் இந்த சீசனில் இவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூபாய் 15 கோடிக்கு வாங்கியது. அதோடு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் சஞ்சு சாம்சன். இவரை அந்த அணி நிர்வாகம் ரூபாய் 14 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அந்தவகையில் அதிக சம்பளம் வாங்கும் 8 வது வீரராக இருக்கிறார்.
தீபக் சாஹர் (சென்னை சூப்பர் கிங்ஸ்)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சாஹரை கடந்த 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது ரூபாய் 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதே தொகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார்.
ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை 12.25 கோடி ரூபாய்க்கு தக்கவைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்களில் லிஸ்டில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!