GT vs PBKS LIVE SCORE :குஜராத்தை பழிக்குபழி வாங்கிய பஞ்சாப்..! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

IPL GT vs PBKS : குஜராத் - பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 03 May 2022 11:09 PM
குஜராத்தை பழிக்குபழி வாங்கிய பஞ்சாப்..! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு பஞ்சாப் முன்னேறியது.

5 ஓவர்களில் 27 ரன்கள் தேவை...! வெற்றியின் விளிம்பில் பஞ்சாப்..!

பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 117 ரன்களை எடுத்துள்ளது. இதனால், அந்த அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. 

அதிரடி காட்டிய பனுகா அவுட்..! ஷிகர்தவானுடன் ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன்..!

பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடி வந்த பனுகா ராஜபக்‌ஷே 28 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

அரைசதம் விளாசிய ஷிகர்தவான்..!

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷிகர்தவான் 38 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். 

பஞ்சாப் 10 ஓவர்களில் 76 ரன்கள்..!
பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் 43 ரன்களுடனும், பனுகா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
முதல் விக்கெட்டை இழந்தது பஞ்சாப்..! ஜானி பார்ஸ்டோ அவுட்..!

பஞ்சாப் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய ஜானி பார்ஸ்டோ 1 ரன்களில் முகமது ஷமி பந்தில் அவுட்டானார்.

தமிழக வீரர் சாய் சுதர்சன் அபாரம்..! பஞ்சாப் அணிக்கு 144 ரன்கள் இலக்கு..!

குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது.  தமிழக வீரர் சாய் சுதர்சன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். 

அரைசதம் அடித்த சாய் சுதர்சன்..!

குஜராத் அணிக்காக பொறுப்புடன் ஆடி வரும் சாய் சுதர்சன் அரைசதம் அடித்துள்ளார். ஆனாலும், குஜராத் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

100 ரன்களை கடக்க திணறும் குஜராத் அணி

GT vs PBKS LIVE SCORE : 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 98/4 

11 ரன்களில் அவுட்டாகிய டேவிட் மில்லர்..! காப்பாற்றுவாரா திவேதியா..?

குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 11 ரன்களில் லிவிங்ஸ்டன் பந்தில் அவுட்டாகினார். 

கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அவுட்..!

ரிஷிதவான் வீசிய பந்தில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் அவுட்டானார். இதனால், குஜராத் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பவர்ப்ளேவில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள்...! நிதானம் காட்டும் ஹர்திக்- சுதர்சன்..!

குஜராத் அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்களை எடுத்துள்ளது. 

2வது விக்கெட்டை இழந்தது குஜராத்...! அதிரடி காட்டுவார்களா ஹர்திக் - சுதர்சன் ஜோடி..!

குஜராத் அணிக்காக அதிரடியாக ஆடிய தொடக்க வீரர் விருத்திமான் சஹா 21 ரன்களில் ரபாடா பந்தில் அவுட்டாகினார். 

டாஸ் வென்றார் ஹர்திக்...! குஜராத் முதலில் பேட்டிங்..!

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையேயான ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். 

Background

ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 48வது ஆட்டத்தில் பலம் மிகுந்த குஜராத் அணியை பஞ்சாப் அணி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கு அறிமுக அணியாக குஜராத் அணி களமிறங்கினாலும் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து வருகிறது.


குஜராத் அணிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன்கில், சஹா நல்ல தொடக்கத்தை அளித்து வருகின்றனர். அந்த அணியின் மிகப்பெரிய பலமாக டேவிட் மில்லர் தற்போது விளங்கி வருகிறார். இக்கட்டான போட்டிகளில் அதிரடியாகவும்,பொறுப்புடனும் ஆடி குஜராத்தை மீட்டெடுக்கிறார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒன் டவுன் வீரராகவும் பொறுப்புடன் ஆடுகிறார். மிடில் ஆர்டரில் களமிறங்கியும் அணிக்கு தனது பேட்டிங்கில் பெரும்பங்கு வகிக்கிறார்.


டேவிட் மில்லரைப் போல அந்த அணியின் ராகுல் திவேதியாவும் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்த தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஏற்கனவே மோதிய போட்டியில் கடைசி இரு பந்தில் இரு சிக்ஸர் அடித்து குஜராத்தை ராகுல் திவேதியா வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷீத்கான் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்குகிறார். இவர்களுடன் அபினவ் மனோகர் மிடில் ஆர்டரில் ஒத்துழைக்கிறார். முகமது ஷமி, பெர்குசன் இருவரும் வேகத்தில் பக்கபலமாக உள்ளனர்.









ஜானி பார்ஸ்டோ இன்னும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. தமிழக வீரர் ஷாரூக்கானும் தனது வாய்ப்பை பிரகாசமாக பயன்படுத்திக் கொண்டால் பஞ்சாப் அணிக்கு மிகப்பெரிய ரன் கிடைக்கும். பனுகா ராஜபக்சே அதிரடியை காட்ட வேண்டியது அவசியம். அதேபோல, ஓடீன் ஸ்மித் அதிரடியாக ஆடினால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் எகிறும். விக்கெட் கீப்பர் ஜிதேஷ்சர்மாவும் அதிரடியில் கலக்குவார் என்பதால் நிச்சயம் பஞ்சாப் நெருக்கடி அளிக்கும்.


பஞ்சாப் அணியின் பந்துவீச்சுக்கு ரபாடா மிகப்பெரிய பலம் ஆவார். அவருக்கு வேத்தில் வைபவ் ஆரோரா, அர்ஷ்தீப்சிங் ஒத்துழைக்க வேண்டும். சுழலில் ராகுல் சஹார் எதிரணிக்கு நெருக்கடி அளிப்பார். கடந்த முறை குஜராத்திடம் அடைந்த தோல்விக்கு பஞ்சாப் அணி இந்த போட்டி மூலம் பழிக்கு பழி தீர்க்குமா? அல்லது குஜராத்தின் ஆதிக்கம் தொடருமா? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.  


9 போட்டிகளில் ஆடியுள்ள குஜராத் ஒரே ஒரு தோல்வி மட்டுமே அடைந்து 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 9 போட்டிகளில் ஆடி 4 வெற்றிகள் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.