GT vs KKR Score LIVE : கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் !
GT vs KKR LIVE : குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வீழ்த்தியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வீரர் உமேஷ் யாதவ் கடைசி கட்டத்தில் ஒரு சிக்சர் அடித்து அசத்தியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் சிவம் மாவி விக்கெட்டை ரஷீத் கான் எடுத்துள்ளார்.
ரஷீத்கான் வீசிய பந்தில் வெங்கடேஷ் அய்யர் சிக்ஸருக்கு அடித்த பந்தை அபினவ் மனோகர் மிகவும் லாவகமாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
குஜராத் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் கொல்கத்தா அணியின் ரஸல் ஆட்டமிழந்த நிலையில், அந்த பந்து நோ பால் என்றதால் ரஸல் மீண்டும் களத்திற்குள் வந்தார்.
10 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 7 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 15 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் 6 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேனின் விக்கெட்டையும் முகமது ஷமி எடுத்து அசத்தினார்.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாம் பில்லிங்ஸின் விக்கெட்டை முதல் ஓவரில் முகமது ஷமி எடுத்து அசத்தினார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய ரஸல் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
18 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வீரர் ரஷீத் கான் முதல் பந்தில் டிம் சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
குஜராத் அணியின் வீரர் டேவிட் மில்லரின் விக்கெட்டை கொல்கத்தா வீரர் சிவம் மாவி எடுத்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 16 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 14 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்ட்யா 36 பந்துகளில் 50 ரன்கள் விளாசியுள்ளார்.
11 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2.2 ஓவர்களில் 21 ரன்களுடன் குஜராத் ஆடி வருகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஒன் டவுன் வீரராக களமிறங்கியுள்ளார்.
Background
ஐ.பி.எல். தொடரின் 35வது ஆட்டத்தில் மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்துள்ளார். இதன்படி, கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -