விமானத்தில் தளபதி விஜயின் 'வாரிசு' படம் பார்த்து 'வைப்' செய்த சூரியகுமார் யாதவ்… வீடியோ வைரல்!

அவர் வாரிசு படத்தின் காட்சியை பார்த்து, அதில் நடனம் ஆடுவது போலவே நடனம் ஆடிக்கொண்டே பார்க்கிறார். பின்னர் வீடியோ எடுப்பவரை பார்த்து சிரித்து, அவரையும் அழைத்து படத்தை பார்க்க சொல்கிறார்.

Continues below advertisement

டி20 உலகின் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்துள்ள சூரியகுமார் யாதவ் இந்த ஐபிஎல் தொடருக்கு முன் தனது ஃபார்மை இழந்து தவித்து வந்தார். ஐபிஎல் தொடங்கிய பின்னும் பெரிதாக ரன்களை எடுக்க முடியாமல் திணறினார். ஆனால் பாதி தொடருக்கு பின் தனது பழைய ஆட்டத்தை மீட்டெடுத்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். அதன் மூலம் மும்பை அணி பல போட்டிகளை வென்று, பிளே ஆஃப் சுற்றுக்குள்ளும் வந்தது. ஆனால் இரண்டாவது குவாலிபையரில் குஜராத் அணியிடம் தொற்று வெளியேறியது.

Continues below advertisement

வாரிசு திரைப்படம் கண்ட சூரியகுமார்

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் விமானத்தில் திரைப்படம் காணும் வீடியோ ஒன்று வைரல் ஆனது. குறிப்பாக தமிழ்நாட்டில் அந்த வீடியோ பெரும் வரவே்பைப் பெற்றது. அதற்கு காரணம் அவர் பார்த்தது ஒரு தமிழ் திரைப்படம். விஜய் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தை தான் அவர் மிகவும் ரசித்து, மகிழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். இந்த வீடியோவை கண்ட விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். 

தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Prize Money: கோப்பையை வெல்லப்போகும் அணிக்கு இத்தனை கோடியா? 25 சதவிகிதம் உயர்த்த திட்டம்!

போர்ட் மீட்டிங் காட்சி

அந்த வீடியோவில் அவர் பார்த்துக்கொண்டிருந்த காட்சி போர்ட் மீட்டிங் காட்சி. அந்த திரைப்படத்தில் விஜய் போர்ட் மீட்டிங்கில் போர்டு மெம்பர்களை தனக்கு சாதகமாக வாக்களிக்க வைக்க அவர்களில் ஒவ்வொருவரது சீக்ரட்டாக வெளியில் கதையாக சொல்லி வருவார். அதனால் பயந்து அவர்கள் விஜய் பக்கம் வருவார்கள். அப்படி கடைசி மூன்று பேர் கதை சொல்வதற்கு முன்பே எழுந்து விஜய் பக்கம் வந்துவிடுவார்கள். அவர்கள் அங்கு வரும்போது மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே வருவார்கள். 

ஆடிக்கொண்டே பார்த்த சூரியகுமார்

இந்த காட்சியை தான் சூரியகுமார் பார்த்து வைப் செய்து கொண்டே விமானத்தில் பயணம் செய்துள்ளார். வெளியான வீடியோவில், அவர் இந்த காட்சியை அவர்கள் ஆடுவது போலவே நடனம் ஆடிக்கொண்டே பார்க்கிறார். பின்னர் விடியோ எடுப்பவரை பார்த்து சிரித்து, அவரையும் அழைத்து படத்தை பார்க்க சொல்கிறார். இந்த வீடியோவை தளபதி விஜய்யின் ரசிகர்கள் வைரலாக பரப்பி வருகின்றனர். வாரிசு திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்தார். இந்த படம் தமிழ், தெலுங்கில் இரண்டிலும் உருவானது, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது. சப்டைட்டில் இல்லாததால், சூர்யகுமார் பார்த்தது இந்தி வெர்ஷனாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continues below advertisement