SRH vs GT,IPL2022 Live:கடைசி ஓவரில் அதிரடியாக த்ரில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் !
SRH vs GT,IPL2022 Live: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போட்டி தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்.. !
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் மூன்று சிக்சர் விளாசி ரஷீத் கான் குஜராத் அணியை வெற்றி பெற செய்துள்ளார்.
கடைசி ஓவரில் குஜராத் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்படுகிறது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 16 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
குஜராத் அணியின் மில்லர் விக்கெட்டை வீழ்த்தி உம்ரான் மாலிக் அசத்தியுள்ளார்.
குஜராத் அணி வெற்றி பெற 36 பந்துகளில் 69 ரன்கள் தேவைப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் விருத்திமான சாஹா 68 ரன்களில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
குஜராத் அணியின் வீரர் விருத்திமான் சாஹா 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியின் வீரர் உம்ரான் மாலிக் குஜராத் அணியின் சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 7 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 4 ஓவர்களின் முடிவில் 40 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 195 ரன்கள் குவித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20-வது ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 25 ரன்கள் விளாசியது.
சன்ரைசர்ஸ் அணியின் வாஷிங்டன் சுந்தர் 3 ரன்களில் ரன் அவுட்டாகியுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியின் வீரர் எய்டன் மார்க்கரம் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் வீரர் மார்க்கரம் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
16 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 7 ஓவர்களின் முடிவில் 59 ரன்கள் எடுத்துள்ளது.
முகமது ஷமி வீசிய 5 வது ஓவரில் திரிபாதி ஒரு சிக்சர், 2 பௌண்டரி அடித்து எல்பிள்யூ முறையில் அவுட் ஆனார்.
முகமது ஷமி வீசிய 3 வது ஓவரில் ஹைதரபாத் அணி கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களில் அவுட்டாகி நடையைக்கட்டினார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் 6 வெற்றி மற்றும் ஒரு தோல்வி அடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 தோல்வி அடைந்துள்ளது.
ஆகவே இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்யும். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஃபார்மில் உள்ளார். அதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அந்த அணியும் தன்னுடைய வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இந்த இரண்டு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -