பிரசித்தி பெற்ற திருக்கடையூரில் ரேக்ளா ரேஸ் காணும் பொங்கல் அன்று நடத்துவது தொடர்பாக எட்டு கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்கை பந்தயம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார். காலை தொடங்கி மாலை வரை நடைபெறும் ரேக்ளா பந்தயத்தில் சின்னமாடு, நடுமாடு, பெரிய மாடு, கரிச்சான் குதிரை, நடுக்குதிரை, பெரிய குதிரை என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும்.
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
ஆலோசனை கூட்டம்
பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் 2020, 21, 22 ஆகிய மூன்று ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட சில காரணங்களால் தடைப்பட்டு இருந்தது. தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக காணும் பொங்கல் அன்று எல்கை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2025 -ம் ஆண்டு எல்கை பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைத்து கட்சியினர்
திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, எல்கை பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள் நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வருவாய் துறையினர், காவல்துறையினரை அழைப்பது, 500 மேற்பட்ட ரேக்ளா மாடு மற்றும் குதிரைகளை பங்கேற்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக, பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்.
IRCTC Down : ஏய் டாமி எந்திரி.. தட்கல் நேரத்தில் மீண்டும் காலை வாரிய ரயில்வே டிக்கெட் இணையத்தளம்!