ஐபிஎல் போட்டியின் தொடக்க சீசனின் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோப்பையை கைப்பற்றவில்லை. அதன் பின்னர் பல்வேறு ஜாம்பவான்களை அந்த அணி கொண்டிருந்தாலும், கோப்பையைக் கைப்பற்றவில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இறுதி வரை சென்று தோற்றது.  இடைப்பட்ட காலத்தில் அந்த அணிக்கான ”கோர் டீம்” என்பது கடந்த சில ஆண்டுகாளாகத்தான் உள்ளது. அதில் மிக முக்கியமானவர்கள் என்றால் அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஹெட்மயர் ஆகியோரைச் சொல்லலாம். 




அதில் கேப்டன் சஞ்சு சாம்சன் மிகச் சிறப்பாக அணியை வழிநடத்தி வெற்றிகளைக் குவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக அதாவது, 2020ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணி களமிறங்கும் முதல் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார். 

 

2020ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரே ஒரு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதகளப்படுத்தியிருந்தார். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அதேபோல் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர் கொண்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 221 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 217 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் 63 பந்துகளை எதிர் கொண்டு 119 ரன்களைக் குவித்தார். அந்த போட்டியில் மட்டும் 12 பவுண்டரி 7 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

 

அதேபோல் கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதரபாத் அணியுடன் மோதியது. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற முக்கிய காரணம் என்றால் அது சஞ்சு சாம்சன் தான். கேப்டனாக சிறப்பான ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் 27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 55 ரன்கள் குவித்து இருந்தார். அதேபோல் இந்த ஆண்டும் ஹைதரபாத் அணியுடன் மோதி வெற்றி பெற்றது. இந்த நடைபெற்ற போட்டியில் 32 பந்துகளை எதிர் கொண்டு 55 ரன்கள் எடுத்து இருந்தார். 

ராஜஸ்தான் அணி தான் களமிறகும் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் கிட்டத்தட்ட 180 ஸ்டைரைக் ரேட்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க, 


மேலும் படிக்க.,