RR vs SRH Score LIVE:இறுதி வரை போராட்டம்.. கடைசி பந்தில் சொதப்பிய ராஜஸ்தான்.. ஐதராபாத் த்ரில் வெற்றி
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
கடைசி பந்தில் இலக்கை எட்டி ஐதராபாத் த்ரில் வெற்றி
ஐதராபாத் வெற்றி பெற கடை ஓவரில் 17 ரன்கள் அவசியம்
19வது ஓவரின் முதல் பந்துகளை சிக்சர்களாக விளாசினார் பிலிப்ஸ்
ஐதராபாத் வெற்றி பெற கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் அவசியம்
ஐதராபாத் அணிக்கு 18 பந்துகளில் 44 ரன்கள் அவசியம்
16 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 158 ரன்களை குவித்துள்ளது
ஐதராபாத் வெற்றி பெற 28 பந்துகளில் 62 ரன்கள் அவசியம்
14 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 136 ரன்களை குவித்துள்ளது
10 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 87 ரன்களை சேர்த்துள்ளது
9 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 73 ரன்களை சேர்த்துள்ளது
ஐதராபாத் வெற்றி பெற 72 பந்துகளில் 150 ரன்கள் தேவை
7 ஓவர்கள் முடிவில் 58 ரன்களை சேர்த்துள்ளது ஐதராபாத்
பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்களை சேர்த்துள்ளது
அதிரடியாக விளையாடி வந்த அன்மோல்ப்ரீத் சிங் 33 பந்துகளில் ஆட்டமிழந்தார்
5.4 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை சேர்த்தது ஐதராபாத்
5 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 45 ரன்களை குவித்துள்ளது
20 ஓவர்கள் முடிவில் 214 ரன்களை குவித்த ராஜஸ்தான்
19.2 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை கடந்தது ராஜஸ்தான்
19 ஓவர்கள் முடிவில் 197 ரன்களை சேர்த்துள்ள ராஜஸ்தான்
95 ரன்களில் ஆட்டமிழந்தார் பட்லர்
18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 190 ரன்கலை சேர்த்துள்ளது
18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 190 ரன்கலை சேர்த்துள்ளது
18 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 190 ரன்கலை சேர்த்துள்ளது
அதிரடியாக விளையாடிய சாம்சன் 33 பந்துகளில் அரைசதம் விளாசினார்
17 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 185 ரன்களை விளாசியுள்ளது
53 பந்துகளில் 91 ரன்களை சேர்த்துள்ளார் பட்லர்
16 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 168 ரன்களை குவித்துள்ளது
பட்லர் - சாம்சன் கூட்டணி 61 பந்துகளில் 100 ரன்களை சேர்த்து அசத்தல்
14.2 ஓவர்கள் முடிவில் 150 ரன்களை எட்டியது ராஜஸ்தான்
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 142 ரன்களை குவித்துள்ளது
ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்களுக்கும் அதிகமாக 13 ஓவர்கள் முடிவில் 135 ரன்களை குவித்துள்ளது ராஜஸ்தான்
கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாத பட்லர், இன்றைய போட்டியில் 32 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்..
11 ஓவர்கள் முடிவில் 115 ரன்களை சேர்த்துள்ள ராஜஸ்தான்
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 107 ரன்கலௌ குவித்துள்ளது
9.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது ராஜஸ்தான்
9 ஓவர்களில் 95 ரன்களை குவித்தது ராஜஸ்தான்
9வது ஓவரின் முதல் 2 பந்துகளையும் சிக்சர்களாக விளாசினார் சாம்சன்
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 74 ரன்களை சேர்த்துள்ளது.
பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 61 ரன்களை சேர்த்தது
அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஷ்வால் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்
4.2 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது ராஜஸ்தான்
4 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 45 ரன்களை சேர்த்துள்ளது.
அடுத்தடுத்து வரும் பவுண்டரியால் 3.3 ஓவர்களில் ராஜஸ்தான் 45 ரன்களை குவித்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் 26 ரன்களை சேர்த்துள்ளது.
முதல் ஓவரிலேயே 10 ரன்களை சேர்த்த ராஜஸ்தான்
அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன், விவ்ரந்த் சர்மா, மார்கண்டே புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன்.
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
ஹாரி ப்ரூக், அன்மோல்ப்ரீத் சிங், மயங்க் தாகர், நிதிஷ் குமார், சன்விர் சிங்
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்&விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ஜோ ரூட்,ஹெட்மேயர், முருகன் அஷ்வின், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் சந்தீப் சர்மா.
இம்பேக்ட் பிளேயர்ஸ்:
படிக்கல், ரியான் பராக், ஹோல்டர், மெக்காய், ஆடம் ஜாம்பா
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது
லக்னோ வெற்றி பெற மீதமுள்ள 7 ஓவர்களில் 111 ரன்கள் தேவை
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
ஐதராபாத் - ராஜஸ்தான் மோதல்:
ஐபிஎல் தொடரின் 52வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மன்சிங் இந்தூர் மைதானத்தில் தொடங்குகிறது.
புள்ளிப்பட்டியல் விவரம்:
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் பத்து போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் தோல்வியுற்ற நிலையில், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டி வருகிறது. இதனிடையே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் நடப்பு சீசனில் ஒன்பது போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியுற்ற ஐதராபாத் அணி, இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.
நேருக்கு நேர்
இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 9 முறையும், ஐதராபாத் அணி 8 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடைசியாக நடந்த 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மைதானம் எப்படி?
ஜெய்ப்பூரில் நடந்த கடைசி மூன்று போட்டிகளின் முதல் இன்னிங்ஸ் 118, 202 மற்றும் 154 என்ற முறையே அமைந்தது. அதனால், எதற்கு சாதகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. முந்தைய போட்டியில் வீழ்ந்த 11 விக்கெட்டுகளில் 6 விக்கெட்டுகளை எடுத்தனர். எனவே, சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கலாம். முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது.
மைதானம் எப்படி..?
- முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 157
- 2வது இன்னிங்ஸ் ஸ்கோர்: 144
- 1வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 2
- 2வது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 1
கணிக்கப்பட்ட அணி விவரம்:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்&விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் பாடிக்கல், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ட்ரெண்ட் போல்ட்/ஆடம் ஜம்பா மற்றும் சந்தீப் சர்மா.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:
மயங்க் அகர்வால், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன்/அகேல் ஹொசைன், கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -