RCB vs KKR IPL 2022 LIVE: கடைசி ஓவர் த்ரில் சேஸிங்... வெற்றி கணக்கை தொடங்கி இருக்கும் பெங்களூரு!
RCB vs KKR IPL 2022 LIVE: டுப்ளிசி தலைமையிலான பெங்களூரு அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது.
கடைசி ஓவர் த்ரில் சேஸிங்கில் போட்டியை வென்று வெற்றி கணக்கை தொடங்கி இருக்கிறது பெங்களூரு!
இரண்டாவது இன்னிங்ஸின் பவர்ப்ளே முடிவில், 3 விக்கெட்டுகள் இழந்து 36 ரன்கள் எடுத்திருக்கிறது பெங்களூரு அணி
வந்தவுடன் பெவிலியன் திரும்பினார் அமுஜ் ராவத். நிதானமாக தொடங்கிய பெங்களூரு அணி டாப் ஆர்டர் பேட்டர்கள் டுப்ளிசி, கோலி அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருக்கின்றனர்
18.5 ஓவர்கள் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்திருக்கிறது கொல்கத்தா அணி
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வரும் கொல்கத்தா அணி, போராடி 100 ரன்களை எட்டி இருக்கிறது
ஏற்கனவே திணறி வந்த கொல்கத்தா அணிக்கு, கேப்டன் ஸ்ரேயாஸ் ரன் சேர்க்க இருந்த நிலையில் ஹசரங்கா பந்துவீச்சில் பவுண்டரி லைனில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி இருக்கிறார் அவர்.
பவர்ப்ளே முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது கொல்கத்தா அணி
Background
RCB vs KKR, IPL 2022 LIVE
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டுப்ளிசி தலைமையிலான பெங்களூரு அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -