பெண்கள் பிரிமியர் லீக்(WPL 2024):


இந்தியாவில் ஆடவர்களுக்கு எப்படி ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படுகிறதோ அதைப்போலவே மகளிருக்காக நடத்தப்படும் லீக் போட்டி தான் பெண்கள் பிரிமியர் லீக்(WPL 2024). இந்த போட்டிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பெண்கள் பிரிமியர் லீக்கின் இரண்டாவது சீசன் நடைபெற உள்ளது. பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்க உள்ள பெண்கள் பிரிமியர் லீக்கின் முதல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோத உள்ளன


இந்நிலையில் கடந்த சீசனில் 8 போட்டிகள் விளையாடி 6 போட்டிகளில் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. அதன்படி மொத்தம் 5 அணிகள் மட்டுமே பங்கேற்ற அந்த சீசனில் 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பெங்களூரு அணி நான்காவது இடத்தை பிடித்தது. இச்சூழலில் தான் இந்த சீசனில் தங்களது அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா.


இந்த முறை சிறப்பாக விளையாடுவோம்:


இது தொடர்பாக பேசிய அவர்,”இது முதல் சீசனை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று நான் நிச்சயமாக விரும்புகிறேன். RCB  அணியில் இருந்து சில வீரர்கள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் நாங்கள் புதிய வீரர்களை  எங்கள் அணிக்கு கொண்டு வந்தோம். எனவே, அணியில் தற்போது சமநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எங்கள் திறமையைன்பொறுத்து நாங்கள் விளையாட விரும்புகிறோம். உள்நாட்டு சீசனில் விளையாடுவது எனக்கு நன்றாக பயிற்சி செய்ய உதவியது. இதற்கு முன்னர்  விளையாடாத சில பெண்களை நாங்கள் பார்த்தோம். இந்தப் பெண்களைப் பார்த்த பிறகு எனது உரிமையாளருக்கு சில பெயர்களை பரிந்துரைக்க முடிந்ததுஎன்றார்.


கோப்பையை வெல்ல முயற்சிப்போம்:


தொடர்ந்து பேசிய அவர், “கடந்த ஆண்டு, போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் அணியில் சேர்ந்தபோது, 90% வீரர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அவர்கள் என்ன செய்தார்கள், என்ன செய்யவில்லை என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆண்டு, அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வது முக்கியம், அதனால் நாங்கள் சிறப்பாக விளையாட முடியும். WPL ஒரு குறுகிய போட்டியாகும் அதனால் அதில் அந்த நேரத்தில் எந்த மாற்றங்களையுக் மேற்கொள்ள முடியாது. நாங்கள் அதிகம் சிந்திக்க விரும்பவில்லை. எங்கள் அணியில் கடந்த ஆண்டை விட சிறப்பாக விளையாட விரும்புகிறோம். அதைச் செய்ய காத்திருக்கிறோம். எங்கள் அணி நிர்வாகத்தில்  உள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள்.  எங்களை பெரிதும் ஆதரித்துள்ளனர், எனவே எல்லாவற்றையும் விட, அவர்களுக்காக கோப்பையை வெல்ல விரும்புகிறோம்.


 


கடந்த சீசனில் நான்கு (தொடர்ச்சியான) தோல்விகளுக்குப் பிறகும் அவர்கள் எங்களை ஆதரித்த விதம், உரையாடல் எங்களின் எதிர்கால வாழ்வை சுற்றியே இருந்தது. எனவே, கடந்த சீசனில் எங்களை ஆதரித்த எங்கள் ரசிகர்களுக்கு கோப்பையை வெல்ல முயற்சிப்பது மிகவும் முக்கியமான ஒன்று. கடந்த வருடம் நான் எதிர்பார்த்தபடி என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு செய்த தவறுகளை இந்த முறை செய்ய நான் விரும்பவில்லை. எங்களது பேட்டிங் வரிசை நன்றாக உள்ளது. ஒரு கேப்டனாக, இந்த முறை வீரர்களை நான் நன்கு அறிவேன்"என்று கூறினார் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா.


 


மேலும் படிக்க: WPL 2024: மகளிர் பிரிமியர் லீக் 2024! எங்கே,எப்போது நடக்கிறது? போட்டியை எப்படி பார்ப்பது? முழு அட்டவணை உள்ளே!


 


மேலும் படிக்க: MS Dhoni: ஐ.பி.எல் கனவு அணி தேர்வு...தல தோனிக்கு கிடைத்த அந்த அங்கீகாரம்! விவரம் உள்ளே!