ஐ.பி.எல் லீக் போட்டிகள்:


 


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது.


கனவு அணி தேர்வு:


இந்நிலையில்.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணி தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த அணியை தேர்ந்தெடுப்பவர்கள் குழுவில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரார் மேத்யூ ஹைடன், ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு முன்னாள் வீரர் டாம் மூடி, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதேபோல் கிரிக்கெட் வீரர்களை தவிர விளையாட்டுச் செய்திகளை சேகரிக்கும் 70 க்கும் அதிகமான பத்திரிகையாளர்களும் இந்த குழுவில் இடம்பெற்றனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து தான் ஐ.பி.எல். தொடரை கொண்டாடும் விதமாக இத்தனை ஆண்டுகளாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை தற்போது தேர்ந்தெடுத்து உள்ளனர்.


 


கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட தல தோனி:


அதன்படி, அனைத்து ஐபிஎல் போட்டிகளையும் அடிப்படையாக கொண்டு தேர்வு செய்யப்பட்ட இந்த அணிக்கு யார் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனும்,ரசிகர்களால் 'தல' என்று அன்போடு அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.தோனி தான் இந்த அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பையை வென்றுக்கொடுத்த தோனியை கேப்டனாக தேர்வு செய்ததை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


 


அனைத்து ஐ.பி.எல். போட்டியையும் சேர்த்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த 15 பேர் கொண்ட அணி வீரர்களின் பட்டியலை பாருங்கள்:


 


எம்.எஸ்.தோனி (கேப்டன்), விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, ஏ பி டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டயா, ரவீந்திர ஜடேஜா,பொல்லார்டு, ரஷீத்கான், சுனில் நரைன், யசுவேந்திர சாஹல், மலிங்கா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா.


 


மேலும் படிக்க: IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!


 


மேலும் படிக்க:Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!