ஐ.பி.எல் தொடர்:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களிலேயே ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் யார் என்பது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.


கிறிஸ் கெய்ல் படைத்த சாதனை:


.பி.எல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக இந்திய அணி வீரரும்,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருபவராக விராட் கோலி இருக்கிறார். ஆனால், ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரராக பெங்களூரு அணிக்காக விளையாடியவரும், வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச் சேர்ந்தவருமான கிறிஸ் கெய்ல் தான் அந்த சாதனையை செய்திருக்கிறார். அதாவது, கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராகத்தான் கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை செய்தார். முன்னதாக, அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், இலங்கையை சேர்ந்த தில்சானும் களம் இறங்கினார்கள். ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டினார் கெய்ல்.அதன்படி, வெறும் 30 பந்துகளில் சதம் அடித்தார் அவர்.


மிஸ்டர் 175:


இவருடன் களம் இறங்கிய தில்சான் 33 ரன்கள், விராட் கோலி 11 ரன்கள் மற்றும் ஏ பி டிவில்லியர்ஸ் 31 ரன்களை எடுக்க மறுபுறம் வான வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார் கெய்ல். அதன்படி 53 பந்துகளில் 153 ரன்கள் எடுத்த அவர் ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களை விளாசினார். அந்தவகையில் மொத்தம் 175 ரன்களை குவித்தார் கிறிஸ் கெய்ல். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் தனி நபர் அதிக பட்ச ரன்னாக இது பதிவானது. கிறிஸ் கெய்ஸ் இந்த சாதனையை கடந்த 2013 ஆம் ஆண்டு செய்திருந்தாலும் தற்போது வரை இந்த சாதனையை யாராலும் நெருங்க கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி வீரரும்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியவருமான பிரண்டன் மெக்கல்லம் இருக்கிறார்.


இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 73 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். அதேபோல் மூன்றாவது இடத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு விளையாடிய குயின்டன் டி காக் 140 ரன்களுடன் இருக்கிறார். நான்காவது இடத்தில் 2015 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய ஏபி டி வில்லியர்ஸ் 133 ரன்கள்  மற்றும் ஐந்தாவது இடத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கடந்த 2020 ஆம் ஆண்டு விளையாடி 132 ரன்களை பெற்றுக்கொடுத்த கே.எல்.ராகுல் உள்ளார்.


மேலும் படிக்க:MS Dhoni: ஐ.பி.எல் கனவு அணி தேர்வு...தல தோனிக்கு கிடைத்த அந்த அங்கீகாரம்! விவரம் உள்ளே!


மேலும் படிக்க: Tamil Thalaivas vs Bengal Warriors: பெங்கால் வாரியர்ஸ் அணியை ஓட விட்ட தமிழ் தலைவாஸ்! கடைசி போட்டியில் அசத்தல் வெற்றி!