IPL 2016 Recap: இறுதிப் போட்டி வாய்ப்பு...தவறவிட்ட ஆர்.சி.பி! கோப்பையை தட்டித்தூக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை கைப்பற்றியது.

Continues below advertisement

 

Continues below advertisement

ஐ.பி.எல் தொடர்பாக நாம் ஏற்கனவே ஐ.பி.எல் ரீகேப் என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டு குறித்தும் ரீவைண்ட் கட்டுரைகளை ஏபிபி நாடு தளத்தில் வெளியிட்டு வருகின்றோம். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர்பான ரீவைண்டை இந்த தொகுப்பில் காணலாம். 

ஐ.பி.எல் 2016:


கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டி விராட் கோலியின் அற்புதமான ஃபார்மிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த சீசனில் மூன்றாவது முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் எப்படியாவது முதல் முறையாக கோப்பையை ஆர்.சி.பி அணி கைப்பற்றும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் மூன்றாவது முறையாக அவர்களின் கனவு பொய்த்தது. 

 

ராயால் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸிடம் மோதியது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தது. அதேநேரம் முதன் முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் பங்குபெற்றது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு பதிலாக அந்த அணி களம் கண்டது. இச்சூழலில் தான் 2016 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதன் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

லீக் போட்டியின் சுருக்கம்:

லீக் சுற்றில் குஜராத் லயன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது. அந்த வகையில் 14 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 18 புள்ளிகளை பெற்றது.  . ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சமமான புள்ளிகளை பெற்றன. அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 16 புள்ளிகளை பெற்றன. ஆனால் RCB சிறந்த ரன் ரேட் காரணமாக இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

அதேநேரம் ஆர்.சி.பி அணி முதல் 8 லீக் போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது. பின்னர் பின்னர் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் அந்த அணி சந்தித்தது. அப்படி 10 போட்டிகள் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அந்த அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகளை விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் பெற்றுக்கொடுத்தனர். இதனால் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

ஐபிஎல் 2016 இறுதிப் போட்டி:

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த வகையில் ஹைதராபாத் அணி 8 ரன்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றது. 

2016 ரெக்கார்ட்:

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்ற வீரர் விராட் கோலி. 16 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 973 ரன்களை குவித்தார். அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றவர் டேவிட் வார்னர். அவர் மொத்தம் 88 பவுண்டரிகளை விளாசியிருந்தார்.

அதிக சிக்ஸர் விளாசிய வீரரும் விராட் கோலி தான். அந்த சீசனில் மட்டும் அவர் 38 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையை செய்தவர் புவனேஷ்வர்குமார். மொத்தம் அவர் 23 விக்கெடுகளை வீழ்த்தி அசத்தினார். ஆடம் ஜம்பா அந்த சீசனில் ஒரு போட்டியில் மொத்தம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கVirat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்கWatch Video: என்ன ஹீரோயிசமாசர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

Continues below advertisement
Sponsored Links by Taboola