RCB vs KKR LIVE Score: சொந்த மண்ணில் சோடை போன பெங்களூரு; 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
IPL 2024 RCB vs KKR LIVE Score: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபி நாடு தளத்தில் உடனுக்குடன் காணலாம்.
இறுதியில் கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் விக்கெட்டுகளை 3 இழந்து 186 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெங்கடேஷ ஐயர் 30 பந்தில் 50 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை யாஷ் தயாள் பந்தில் இழந்து வெளியேறினார்.
வெங்கடேஷ் ஐயர் 29 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
கொல்கத்தா அணி 14 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் குவித்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக விளையாடிய சுனில் நரேன் 22 பந்தில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. கொல்கத்தா வெற்றி பெற 98 ரன்கள் 84 பந்துகளில் தேவைப்படுகின்றது.
கொல்கத்தா அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்து அதிரடியாக இலக்கைத் துரத்தி விளையாடி வருகின்றது.
பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 59 பந்தில் நான்கு பவுண்டரி நான்கு சிக்ஸர் விளாசி 83 ரன்கள் குவித்திருந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 பந்தில் மூன்று சிக்ஸர் விளாசி 20 ரன்கள் குவித்து அணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார்.
19 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. தினேஷ் கார்த்திக் இந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் விளாசினார்.
பெங்களூரு அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பெங்களூரு அணியின் ரஜித் படிதார் தனது விக்கெட்டினை 3 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை 15வது ஓவரின் முதல் பந்தில் தனது விக்கெட்டினை 19 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய நிலையில் சுனில் நரேன் பந்தில் வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டினை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
விராட் கோலி 36 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
பெங்களூரு அணி அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தாமல் பந்துகளை வீணாக்கி வருவதால் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 2 விக்கெட்டினை இழந்து 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக ஆடி வந்த கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டினை 21 பந்தில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
பெங்களூரு அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
விராட் கோலி மற்றும் கேமரூன் கிரீன் கூட்டணி 50 ரன்களைக் கடந்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 64 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளேவில் மட்டும் பெங்களூரு அணி 6 பவுண்டரியும் மூன்று சிக்ஸரும் விளாசி மிரட்டலான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றது.
பெங்களூரு அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 46 ரன்கள் சேர்த்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டினை இழந்து 34 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் மூன்றாவது ஓவரில் மிட்ஷெல் ஸ்டார்க் ஓவரில் விராட் கோலி பவுண்டரி சிக்ஸர் அடுத்தடுத்து விளாசி மிரட்டி வருகின்றார்.
போட்டியின் இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் டு பிளெசி தனது விக்கெட்டினை 8 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார்.
போட்டியின் இரண்டாவது ஓவரில் டு பிளெசி சிக்ஸர் விளாசி அசத்தியுள்ளார்.
முதல் ஓவர் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஸ்டார்க் வீசிய போட்டியின் முதல் பந்தை கோலி பவுண்டரிக்கு விராட்டி சிறப்பான தொடக்கத்தை அமைத்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
17வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 29ஆம் தேதி முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் நடைபெறுகின்றது.
இரு அணிகளில் பெங்களூரு அணி இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் ஒரு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியிலும் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இதுவரை ஒரு லீக் போட்டியில் விளையாடி அதில் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை மொத்தம் 9 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த 9 லீக் போட்டிகளிலும் உள்ளூர் மைதானத்தில் விளையாடிய அணியே வெற்றி பெற்றுள்ளது. அந்த நிலை இந்த போட்டியில் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 போட்டிகளில் வென்று ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 18 போட்டிகளில் வெற்றியை இழந்ததில், மிகவும் முக்கியமான போட்டி ஒன்று உள்ளது. அதாவது பெங்களூரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் என்றால் அது, 49 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதுதான். இதுதான் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோர் என்பதைக் காட்டிலும், ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் மிகக் குறைந்த ஸ்கோராக உள்ளது.
இரு அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் வெற்றியைச் சந்தித்துள்ளதால், இந்த போட்டியில் வெற்றிப்பயணத்தை தொடர்ப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இரு அணிகளின் ப்ளேயிங் லெவன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அல்ஜாரி ஜோசப், மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரமன்தீப் சிங், ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -