PBKS vs SRH, IPL 2023 Live: பஞ்சாப் பந்து வீச்சை துவம்சம் செய்து ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!
PBKS vs SRH, IPL 2023 Live: பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேடுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு இன்னும் 3 ரன்கள் தேவைப்படுகிறது. 17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவரும் த்ரிபாட்டி 15வது ஓவரில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி அதகளப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இந்த ஓவர் முடிவில் 118 - 2.
அதிரடியாக ஆடி வரும் ராகுல் த்ரிப்பாட்டி 35 பந்தில் 50 ரன்கள் சேர்த்துள்ளார். 13 ஓவர்களில் ஹைதராபாத் அணி 94 ரன்கள் சேர்த்துள்ளது.
2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ள ஹைதராபாத் அணி 12 ஓவர்கள் முடிவில் 86 ரன்கள் குவித்து வெற்றியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது.
அதிரடியாக ரன்கள் குவித்து வரும் ஹைதராபாத் அணியினர் 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது.
ராகுல் சஹார் பந்து வீச்சில் மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 8.3 ஓவரில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் சேர்த்துள்ளது.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் ஹைதரபாத் அணி ப்வர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 34 ரன்கள் சேர்த்துள்ளது.
விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த பஞ்சாப் அணிக்காக 99 ரன்களை கேப்டன் தவான் விளாசியதால் அந்த அணி 144 ரன்களை ஐதராபாத்திற்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் சேர்த்துள்ளது.
பொறுப்புடன் ஆடி வரும் ஷிகர் தவான் 42 பந்தில் அரைசதம் விளாசியுள்ளார். 16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது.
12வது ஓவரின் முதல் பந்தில் பஞ்சாப் அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்துள்ளது.
10.4வது ஓவரில் பஞ்சாப் அணியின் ஷாரூக் கான் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இதன் மூலம் பஞ்சாப் அணி 6வது விக்கெட்டை இழந்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஷகிந்தர் ரஸா 5 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
நிதானமாக ஆடிவந்த பஞ்சாப் அணியின் சாம் கரன் தனது விக்கெட்டை இழந்துள்ளார். தற்போது பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்கள் சேர்த்துள்ளது.
3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் 41 - 3
4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணியின் பந்து வீச்சில் பஞ்சாப் அணி சீர்குலையத் தொடங்கியுள்ளது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் ஓவரில் ஒரு விக்கெட்டையும்ன் இரண்டாவது ஓவரில் மற்றொரு விக்கெட்டையும் இழந்து தடுமாறி வருகிறது.
Background
ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி 16வது ஐபிஎல் சீசன் தொடங்கியது. சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதுவரை 12 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இதில் ஏறக்குறைய எல்லா அணிகளும் 2 போட்டிகளில் விளையாடி விட்டது. போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதனிடையே இன்று நடைபெறும் 14 வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை
எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியை பொறுத்தவரை தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 72 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் லக்னோ அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. இதனால் இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் அந்த அணி களமிறங்கும். ஹைதராபாத் அணியில் பேட்டிங் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.
ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியை பொறுத்தவரை பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது. அதனால் இப்போட்டியில் அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பெற முயற்சிக்கும்.
மைதானம் எப்படி?
ஹைதராபாத் அணியின் உள்ளூர் மைதானமான ராஜீவ் காந்தி மைதானத்தில் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இங்கு விளையாடிய 46 போட்டிகளில் 29 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இங்கு மொத்தம் 65 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 37 முறை வெற்றி பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்து வீசவே விரும்பும் என எதிர்பார்க்கலாம்.
அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்)
ஹைதராபாத் அணியில் மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்) , ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், அடில் ரஷித் உம்ரான் மாலிக் ஆகியோரும், பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் (impact players) யார்?
ஹைதராபாத் அணியில் ஹாரி ப்ரூக்ஸ், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், அகேல் ஹொசைன் ஆகியோரும், பஞ்சாப் அணியில் ககிசோ ரபாடா, ரிஷி தவான், மேத்யூ ஷார்ட் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களாக இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -