PBKS vs SRH LIVE Score: கடைசி வரை திக் திக்! போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் த்ரில் வெற்றி!

ஐபிஎல் 2024ல் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்த அப்டேட்களை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

முகேஷ் Last Updated: 09 Apr 2024 11:23 PM
PBKS vs SRH LIVE Score: கடைசி வரை திக் திக்! போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் த்ரில் வெற்றி!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 

PBKS vs SRH LIVE Score: 10 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 64 ரன்கள்..!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. 

PBKS vs SRH LIVE Score: 3 விக்கெட்டை இழந்து தடுமாறும் பஞ்சாப் கிங்ஸ்.. பந்துவீச்சில் பட்டையை கிளப்பும் ஹைதராபாத்..!

ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 5 ஓவர்களுக்குள் 20 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. 

PBKS vs SRH LIVE Score: கடைசி நேரத்தில் பேயாட்டம் ஆடிய ஹைதராபாத்.. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 183 ரன்கள் இலக்கு!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 


ஷாபாஸ் அகமது 7 பந்துகளில் 14 ரன்களுடனும், உனத்கட் 1 பந்தில் 6 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். 

PBKS vs SRH LIVE Score: ஹர்சல் படேல் பந்தை அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்டிய சமத்..!

ஹர்சல் படேல் வீசிய 14 வது ஓவரில் சமத் அடுத்தடுத்து சமத்தாக இரண்டு பவுண்டரிகளை விரட்டி மிரட்டினார். 

PBKS vs SRH LIVE Score: ஹைதராபாத் 9 ஓவர்களில் 61/3..! மீளுமா பாட் கம்மின்ஸ் படை..?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. த்ரிப்பாதி 10 ரன்களுடனும், நிதீஸ் ரெட்டி 11 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர். 

PBKS vs SRH LIVE Score: அதிரடிக்காட்டிய அபிஷேக் சர்மாவும் அவுட்.. 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் ஹைதராபாத்..!

11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்வாவும், சாம் கர்ர்ன் பந்தில் அவுட்டானார். தற்போது ஹைதராபாத் அணி 39 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 

PBKS vs SRH LIVE Score: வந்தவுடன் வெளியேறிய மார்க்ரம்.. டக் அவுட்டில் வெளியேறிய சோகம்..!

டிராவிஸ் ஹெட் வெளியேறிய வேகத்தில் உள்ளே வந்த மார்க்ரமும் அர்ஷ்தீப் சிங் வீசிய அதே 4வது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். 

PBKS vs SRH LIVE Score: முதல் விக்கெட்டை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. 21 ரன்களில் அவுட்டான டிராவிஸ் ஹெட்!

15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட், அர்ஷ்தீப் சிங் வீசிய 4வது ஓவரில் ஷிகர் தவானிடம் அவுட்டானார். 

PBKS vs SRH LIVE Score: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளேயிங் அணி..!

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கட்

PBKS vs SRH LIVE Score: பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளேயிங் அணி..!

ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

Background

இன்று ஐபிஎல் 2024 இல், ஷிகர் தவானின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பாட் கம்மின்ஸின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே போட்டி நடைபெறுகிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த போட்டியின் டாஸ் இரவு 7 மணிக்கு போடப்பட்ட நிலையில், போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது


பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் தங்களின் முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஹைதராபாத் தனது கடைசி ஆட்டத்தில் சென்னையை தோற்கடித்தது. அதேபோல், பஞ்சாப் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்றது. எனவே, இந்த போட்டியும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ஐபிஎல் 2024ல் இதுவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த காலகட்டத்தில், பாட் கம்மின்ஸ் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. ஷிகர் தவான் அணியும் இரண்டு போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. 


பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் போட்டியின் பிட்ச் ரிப்போர்ட்:


இன்று சண்டிகரின் இந்த மைதானத்தில் அதிக ரன்கள் அடிக்கும் போட்டியை எதிர்பாக்கலாம். இருப்பினும், இங்கு கடந்த போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமைந்தது. இந்த மைதானத்தில் டெல்லியை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தியது. அந்த போட்டியில் பஞ்சாப் அணி 175 ரன்கள் இலக்கை எளிதாக எட்டியது. 


போட்டி கணிப்பு


பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் இடையே கடும் போட்டி நிலவக்கூடும். இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ் அணியே முன்னிலையில் உள்ளது என்று எங்கள் போட்டி கணிப்பு மீட்டர் கூறுகிறது. அதாவது இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெறலாம். இருப்பினும், பஞ்சாப் தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹைதராபாத் அவரை இலகுவாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. 


பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் XI: 


ஷிகர் தவான் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அசுதோஷ் சர்மா, சாம் குர்ரான், ஷஷாங்க் சிங், சிக்கந்தர் ராசா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் XI:


டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், டி நடராஜன்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.