ஐ.பி.எல் சீசன்:


 


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளதுஅந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் கடைசி பந்தில் வெற்றி பெற உதவிய தோனியின் சிக்ஸர் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:


 


தோனியின் சிக்ஸர்:


கடந்த 2016 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நடைபெற்ற 53 வது லீக் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய கிங்ஸ் XI பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி களம் இறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்க்யா ரஹானே மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் 15 பந்துகளில் ̀19 ரன்களை எடுத்து ரஹானேவும் 29 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கவாஜாவும் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க எம்.எஸ்.தோனி களம் இறங்கினார். அந்த போட்டியில் அதிரடியாக விளையாடினார் தோனி.


 


அப்போது 5 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழல் நிலவியது. வெற்றியை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. களத்தில் தோனி நின்றதால் சிக்ஸர்கள் பறக்கும் என்று புனே அணி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்க ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தோனி அந்த போட்டியில் அதைச் செய்தார். அதன்படி, இரண்டாவது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார். 3 வது பந்தை டாட் வைத்தார். 4 வது பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டார். 5 வது மற்றும் கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் எம்.எஸ்.தோனி. இதன் மூலம் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தார்.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


 


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!