ஐபிஎல் 15வது சீசனின் தொடக்க போட்டியில் சென்னை குஜராத் அணிகள் மோதி தொடரை துவங்கி வைத்துள்ளன. பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வென்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணி இந்த ஐபிஎல் 2023 ஐ தொடங்கியுள்ள நிலையில் அந்த அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், தோனியின் கடைசி ஓவர் அதிரடி ரசிகர்களை திருப்தி படுத்தியது. அவர் இதன்மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். மைல்கற்களை முறியடித்து சாதனைகளை படைப்பது தோனிக்கு புதிதல்ல என்றாலும் அயர்லாந்து பந்துவீச்சாளர், ஜோஷ் லிட்டில் வீசிய பந்தை ஒரு பெரிய சிக்ஸருக்கு விரட்டியதன் மூலம் 200 சிக்ஸ் கிளப்பில் இணைந்துள்ளார். 






ஒரு அணிக்காக அதிக சிக்ஸர்கள்


CSK இன் இன்னிங்ஸின் இறுதி ஓவரில் இடியாக அடிக்கப்பட்ட புல் ஷாட் மூலம் தோனி இந்த சாதனையை எட்டியுள்ளார். போட்டியின் வரலாற்றில் ஒரு ஐபிஎல் அணிக்காக 200 சிக்ஸர்களை அடித்த ஐந்தாவது வீரர் ஆனார். ஒட்டுமொத்தமாக தோனி தற்போது 230 ஐபிஎல் சிக்ஸர்களை அடித்துள்ளார். அதில் 3 சிக்ஸர்கள் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக எடுத்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: GT vs CSK IPL 2023: சென்னையின் வியூகங்களை சுக்குநூறாக்கி அபார வெற்றி பெற்ற குஜராத் அணி; இந்த சீசனின் முதல் வெற்றி..!


ஒரு ஐபிஎல் அணிக்காக 200 சிக்ஸர்கள் அடித்த பட்டியல்


ஒரே அணிக்காக, 200 சிக்ஸர்களுடன் பேட்டர்கள் பட்டியலில் எம்எஸ் தோனி இப்போது 5வது இடம் பிடித்துள்ளார். அவருக்கு முன்னால் கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ், கீரன் பொல்லார்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் உள்ளனர்.


கிறிஸ் கெய்ல் (ஆர்சிபி): 239


ஏபி டி வில்லியர்ஸ் (ஆர்சிபி): 238


கீரன் பொல்லார்ட் (எம்ஐ): 223


விராட் கோலி (ஆர்சிபி): 218


எம்எஸ் தோனி (சிஎஸ்கே): 200



20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்


இன்னொரு சாதனையாக, இந்தியன் பிரீமியர் லீக்கின் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் தோனி தனது இடத்தில் இன்னும் வலுவாக அமர்ந்துள்ளார்.


ஐபிஎல் 20வது ஓவரில் அதிக சிக்ஸர்கள்:


எம்எஸ் தோனி – 53


கீரன் பொல்லார்ட் – 33


எம்.எஸ்.தோனி பேட்டிங்


முக்கியமான கட்டத்தில் நம்பர் 7இல் களம் கண்ட தோனி, 200 ஸ்டிரைக் ரேட்டுடன், 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து அணி ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க உதவினார். கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த தோனியின் வேகமான குவித்த ரன்கள் சிஎஸ்கே போர்டில் 178 ரன்களை பதிவு செய்ய உதவியது.