லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விளையாடிய 14 போட்டிகளில் 9 ல் வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. 


கடந்த ஆண்டு சிறப்பாக லக்னோ அணியை கொண்டு சென்ற கே.எல்.ராகுல்தான், இந்த ஆண்டும் லக்னோ அணிக்கு தலைமை தாங்குகிறார். இந்த ஆண்டு நிச்சயம் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குவர். 


டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி கடந்த சீசனில் 7 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் இல்லாத சூழலில், டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் தலைமை தாங்குகிறார். 


பிட்ச் எப்படி..? 


லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சாளர்கள் ஏதேனும் ஒரு தவறு செய்தால் பேட்ஸ்மேன்கள் அதை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிடுவார்கள். எனவே இந்த போட்டியில் அதிக ஸ்கோரை இரு அணிகளிடம் இருந்து எதிர்பார்க்கலாம். முதலில் டாஸ் வென்ற அணி பேட்டிங் செய்தால் வெற்றி வாய்ப்பு அதிகம். கடைசியாக இந்த மைதானத்தில் நடந்த 3 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 


விவரம்:


முதல் இன்னிங்ஸ் அதிகப்பட்ச  ஸ்கோர்: 151


2வது இன்னிங்ஸ் குறைந்தபட்ச ஸ்கோர்: 122


1வது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 2


2வது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்ற போட்டிகள் : 1


மழைக்கு வாய்ப்பா..? 


வெப்பநிலை 18 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மழைக்கு வாய்ப்பில்லை. 


யாருக்கு வெற்றி வாய்ப்பு : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முழு அணி: கேஎல் ராகுல் (கேப்டன்), ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, குயின்டன் டி காக், மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், யுத்வீர் சரக், ஸ்வப்னில் சிங், பிரேராக் மன்கட், அமித் மிஸ்ரா, டேனியல் சாம்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், நிக்கோலஸ் பூரன்


டெல்லி கேபிடல்ஸ் முழு அணி: டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், அபிஷேக் போரல், பிருத்வி ஷா, ரிலீ ரோசோவ், ரோவ்மன் பவல், யாஷ் துல், அக்சர் படேல், லலித் யாதவ், அமன் கான், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான், லுங்கி என்கிடி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், பில் சால்ட், கலீல் அகமது, முகேஷ் குமார், சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால்