ஐபிஎல் 16வது சீசன் நேற்று முதல் பிரமாண்டமாக தொடங்கியது. நேற்றைய முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் குஜராத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்தநிலையில், இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது மொஹாலி மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 


இரு அணிகளும் கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு தகுதிபெறவில்லை. எனவே,  இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க முயற்சிப்பர். கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக நிதிஷ் ராணாவை கேப்டனாக கேகேஆர் நிர்வாகம் அறிவித்தது.  நிதிஷ் ராணாவின் கேப்டன்ஷி எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பதை பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். கொல்கத்தா அணியை பொறுத்தவரை சுனில் நரைன், ரஸல், லாக்கி பெர்குசன்,  ரஹ்மானுல்லா குர்பாஸ் முக்கிய வெளிநாட்டு வீரர்களை பக்கபலமாக கொண்டுள்ளது. 


அதேபோல், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானின் அனுபவம் பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக பேர்ஸ்டோவுக்கு பதிலாக மேத்யூ ஷார்ட்டை பஞ்சாப் அணி எடுத்தது. மேலும், அதிரடி ஆட்டக்காரர் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் பஞ்சாப் அணிக்காக தொடக்க லீக் போட்டிகளில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டார்.  சாம் கர்ரன், நாதன் எல்லிஸ், பானுகா ராஜபக்சே மற்றும் டி20 உலகக் கோப்பையில் கலக்கிய சிக்கந்தர் ராசாவை கைக்குள் வைத்துள்ளது. 


பிட்ச் எப்படி..? 


மொஹாலி பிட்சின் மேற்பரப்பு எப்போதும் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும். எனவே, அதிரடியாக விளையாட வேண்டும் என்ற நினைப்பில் உள்ளே வராமல் கவனத்தை தொடங்க வேண்டும். போட்டியானது சிறிது நேரத்திற்கு பிறகு பேட்டிங் சாதகமாக அமையும்.  முதலில் டாஸ் வெல்லும் அணி பந்துவீசினால் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 


மழைக்கு வாய்ப்பா..? 


தற்போது மொஹாலி மைதானத்தில் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மாலை 5 மணியளவில் மழை பெய்ய வாய்ப்புள்ள நிலையில் 40% க்கும் அதிகமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 


சிறந்த பேட்ஸ்மேன்:


கடந்த பல மாதங்களாக இந்திய அணியில் இருந்து உட்கார வைக்கப்பட்ட சூழ்நிலையில், தான் யார் என்பதை நிரூபிக்க தவான் இந்த தொடரை சரியாக பயன்படுத்தி கொள்வார். ஏற்கனவே, ஷிகர் தவானுக்கு ஐபிஎல் அணியை வழிநடத்திய அனுபவம் உண்டு. இருப்பினும், பேட்டிங்கில்தான் அவரது முழு கவனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிரடியில் எதிரணியை ஆட்டி படைப்பாரா..? அடங்கி போவாரா..? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். 


சிறந்த பந்துவீச்சாளர்:


சுனில் நரைனின் பந்துவீச்சு பல ஆண்டுகள் கடந்த பிறகு இன்னும் மர்மமாகவே இருக்கிறது. கடந்த சில சீசன்களாக விக்கெட்களை எடுக்கவில்லை என்றாலும், ரன்களை கட்டுப்படுத்துகிறார். இவரது பந்துவீச்சால் பஞ்சாப் அணியை நிச்சயம் கதிகலங்க வைப்பார். 


போட்டியில் யார் வெற்றிபெற அதிக வாய்ப்பு : பஞ்சாப் கிங்ஸ்


கொல்கத்தா அணி முழு வீரர்கள் பட்டியல்: நிதிஷ் ராணா (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, மந்தீப் சிங், ஷாகிப் சக்ரா ரனாதி, ஹர்ஷித்வர் ரனாதி, வருண்தி , அனுகுல் ராய், ரிங்கு சிங், என் ஜடாதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (தற்போது காயம்)


பஞ்சாப் அணி முழு வீரர்கள் பட்டியல்: ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ் சிங், நாதன் எல்லிஸ் சிங் ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோகித் ரதீ, சிவம் சிங்