MI vs SRH, IPL 2023 LIVE: இலக்கை எட்டிவிட முடியம் ஆனால் விக்கெட்டுகள் இல்லை; என்ன செய்யும் ஹைதரபாத்.. திக் திக் இறுதி ஓவர்கள்..!

IPL 2023, Match 25, MI vs SRH: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரசைஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 18 Apr 2023 10:47 PM
MI vs SRH Live Score: நிலையான் ஆட்டம் முடிவுக்கு வந்தது..!

41 ப்ந்துகளில் 48 ரன்கள் சேர்த்த மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை இழந்தார். 14.5 ஓவர்களில் மும்பை அணி 132 - 6  என்ற நிலையில் உள்ளது. 

MI vs SRH Live Score: அடுத்தடுத்து விக்கெட்டுகள்..!

சிறப்பாக இலக்கை நோக்கி முன்னேறி வந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் 9வது ஓவரிலும், அபிஷெக் 10வது ஓவரிலும் தனது விக்கெட்டை இழந்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஹைதரபாத் அணி 76 - 4. 

MI vs SRH Live Score: பவர்ப்ளே முடிவில்..!

பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH Live Score: இரண்டாவது விக்கெட் - ராகுல் த்ரிபாட்டி

ஹைதராபாத் அணியின் ராகுல் த்ரிபாட்டி தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs SRH Live Score: முதல் விக்கெட்டை இழந்த ஹைதராபாத்..!

193 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் ப்ரூக் தனது விக்கெட்டை இழந்தார். அவர் 7 பந்தில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

MI vs SRH Live Score: இமாலய இலக்கு..!

சிறப்பாக ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்துள்ளது. 

MI vs SRH Live Score: விக்கெட்..!

அதிரடியாக ஆடி வந்த திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

MI vs SRH Live Score: 150 ரன்கள்..!

அதிரடியாக ஆடிவரும் மும்பை அணி 16.2 ஓவர்களில் 150 ரன்களை எட்டியது. 

MI vs SRH Live Score: 15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH Live Score: 100 ரன்கள்..!

மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ள மும்பை அணி 13 ஓவர்கள் முடிவில் 103 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH Live Score: மூன்றாவது விக்கெட் - சூர்யகுமார் யாதவ்..!

12வது ஓவரில் களமிறங்கி 3 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்கள் எடுத்த சூர்ய குமார் யாதவ் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

MI vs SRH Live Score: இரண்டாவது விக்கெட் - இஷான் கிஷன்..!

சிறப்பாக விளையாடி வந்த இஷான் கிஷன் 31 பந்தில் 38 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

MI vs SRH Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH Live Score: பவர்ப்ளே முடிவில்..!

சிறப்பாக ஆடி வரும் மும்பை அணி பவ்ர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH Live Score: ஐந்து ஓவர்கள் முடிவில்..!

ஐந்து ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs SRH Live Score: முதல் விக்கெட் - ரோகித் சர்மா.>!

அதிரடியாக ஆடிவந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டை நடராஜன் பந்து வீச்சில் இழந்தார். அவர் 18 பந்தில் 28 ரன்கள் சேர்த்து இருந்தார். 

MI vs SRH Live Score: டாஸ்..!

டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்து வீச முடிவு செய்துள்ளார். 

Background

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. 


மும்பை - ஐதராபாத் அணிகள் மோதல்:


ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு தொடரில் இதுவரை மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய இரு அணிகளின் செயல்பாடும் ஒரே விதமாக தான் உள்ளன. முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்த அணிகள், அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முறையே, 8 மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. இன்றைய போட்டியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில், 5வது இடத்திற்கு முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.


மைதானம் எப்படி?


ராஜிவ் காந்தி மைதானமானது பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால், இது ஒரு ஹை-ஸ்கோரிங் போட்டியாக அமைய வாய்ப்புள்ளது. இந்த மைதானத்தில் நடப்பு தொடரில் இரண்டு போட்டிகள் மட்டுமே நடந்துள்ள நிலையில், ஒன்றில் ராஜஸ்தான் அணி 200+ ரன்களை குவிக்க, மற்றொன்றில் 144 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் அணி அளிதில் எட்டியது. இதனால், இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். 


அணிகளின் நிலவரம்:


பேட்டிங்கிற்கு சாதகமான இந்த போட்டியில் கோலோச்ச மும்பை அணியில் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன் மற்றும் திலக் வர்மா என ஒரு பெரும் பேட்டிங் பட்டாளமே உள்ளது. அதேநேரம் ஐதராபாத் அணியிலும் ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், திரிபாதி மற்றும் மார்க்ரம் போன்ற தரமான வீரர்கள் உள்ளனர்.


சிறந்த பேட்ஸ்மேன்: இன்றைய போட்டியில் ஹாரி ப்ரூக் சிறந்த பேட்ஸ்-மேன் ஆக கவனம் ஈர்க்க வாய்ப்பு உள்ளது.


சிறந்த பந்துவீச்சாளர்: இன்றைய போட்டியில் மயங்க் மார்கண்டே சிறந்த பந்துவீச்சாளராக ஆக கவனம் ஈர்க்க வாய்ப்பு உள்ளது.


மும்பை உத்தேச அணி:


இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, துவான் ஜான்சன், ரிலே மெரிடித்


ஐதராபாத் உத்தேச அணி:


ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், டி நடராஜன்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.