அல்லு அர்ஜூன் கைது
புஷ்பா 2 படத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவரது 9 வயது மகனும் மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்தது. முன் ஏற்பாடுகள் இன்றி திரையரங்கிற்கு வருகை தந்த காரணத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூனை தெலங்கானா போலீஸ் கைது செய்து பதினைந்து நாள் ரிமாண்டில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அல்லு அர்ஜூன் கைது குறித்து திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்கல் அதிருபதியை வெளிப்படுத்தி வரும் நிலையில் தற்போது பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெலங்கானா போலீஸை விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஶ்ரீதேவையை கைது செய்ய சொர்க்கத்துக்கு போவீற்களா
" நடிகர் அல்லு அர்ஜூனி கைதை எதிர்த்து ஒவ்வொரு பிரபல நட்சத்திரமும் போராட வேண்டும். ஒரு நடிகரோ அல்லது அரசியல் தலைவரோ அவர் பயங்கரமான பிரபலமாக இருப்பது அவர்களின் குற்றமா. என்னுடைய படப்பிடிப்பின் போது நடிகை ஶ்ரீதேவியை பார்க்க வந்த கூட்டத்தில் மூன்று பேர் உயிரிழந்தார்கள். அப்போ ஶ்ரீதேவியை கைது செய்ய தெலங்கானா போலீஸ் சொர்க்கத்திற்கு செல்வார்களா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அல்லு அர்ஜூன் கைது முழு விவரம்
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியானது. அப்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தின் சிறப்பு காட்சியைப் பார்க்க மனைவி ரேவி, மகன் சாய் தேஜா மற்றும் மகளுடன் வந்தது பாஸ்கர் குடும்பம். அப்போது திரையரங்கத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் வந்ததால் திரையரங்கில் தள்ளுமுள்ளு நடைபெற்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பாஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்த ரேவதி (39) மற்றும் மகன் தேஜா காயமடைந்தார்கள். காயமடைந்த இருவருக்கும் உடனே முதலுதவி அளிக்கப்பட்டது என்றாலும் ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மகன் தேஜா அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரூ 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கினார். மேலும் சிறுவன் சாய் தேஜின் மருத்துவ செலவுகளுக்கு பொறுப்பேற்றுள்ளார்