MI vs CSK Score LIVE: மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் வீழ்த்தி சென்னை அணி அபாரம்

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 06 May 2023 07:06 PM
சென்னை அணி அபார வெற்றி

17.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி சென்னை அணி அபார வெற்றி பெற்றது

4வது விக்கெட்டை இழந்த சென்னை

44 ரன்களில் ஆட்டமிழந்தார் கான்வே

16 ஓவர்கள் முடிந்தது..

16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 128 ரன்களை சேர்த்துள்லது

வெற்றியை நெருங்கும் சென்னை

14.1 ஓவர் முடிவில் சென்னை அணி 119 ரன்களை குவித்துள்ளது

இம்பேக்ட் பிளேயர் அவுட்

இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தார்

100 ரன்களை எட்டிய மும்பை

12.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 100 ரன்களை எட்டியது

52 ரன்கள் தேவை

சென்னை அணி வெற்றி பெற 54 பந்துகளில் 52 ரன்கள் மட்டுமே தேவை

பாதியாட்டம் முடிந்தது

10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 84 ரன்களை சேர்த்துள்ளது

ரகானே அவுட்..

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதிரடியாக ரன் குவிக்கும் சென்னை

சென்னை அணி 8 ஓவர்கள் முடிவில் 73 ரன்களை சேர்த்துள்ளது.

Breaking News LIVE : மீனவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தல்

தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் நாளைக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முடிந்தது பவர்-பிளே

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 55 ரன்களை சேர்த்துள்ளது.

50 ரன்களை எட்டிய சென்னை

வெறும் 5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 50 ரன்களை எட்டியுள்ளது


 




கெய்க்வாட் - அவுட்

அதிரடியாக விளையாடி வந்த கெய்க்வாட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்

4 ஓவர்கள் முடிந்தது

4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 46 ரன்களை குவித்துள்ளது

அடுத்தடுத்து பவுண்டரி..

3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 36 ரன்களை குவித்துள்ளது 

அடுத்தடுத்து பவுண்டரி..

3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 36 ரன்களை குவித்துள்ளது 

முடிந்தது முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் சென்னை அணி 10 ரன்களை சேர்த்துள்ளது

140 ரன்கள் இலக்கு

சென்னை அணிக்கு 140 ரன்களை இலக்காக நிர்ணயித்த மும்பை

மீண்டும் ஒரு விக்கெட்

20 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்டப்ஸ்

6 பந்துகள் மட்டுமே மிச்சம்

19 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 134 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது


 

முக்கிய விக்கெட் காலி

அதிரடி வீரர் டிம் டேவிட் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்

பொறுப்பான ஆட்டம் முடிவுற்றது..

61 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார் வதேரா

16 ரன்கள்

போட்டியின் 17வது ஓவரில் மும்பை அணி 17 ரன்களை சேர்த்தது

வதேரா அரைசதம்..

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வதேரா 46 பந்துகளில் அரைசதம் எட்டினார்.

100 ரன்களை கடந்த மும்பை

15.2 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 100 ரன்களை கடந்தது

வந்தது முதல் சிக்சர்..

15.1 ஓவர்கள் முடிவில் மும்பை அணி முதல் சிக்சரை விளாசியுள்ளது

30 பந்துகளே மிச்சம்..

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 93 ரன்களை சேர்த்துள்ளது

சதம் எப்போது வரும்?..

14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 86 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது

சிக்சர் அடிக்காத மும்பை அணி
13 ஓவர் முடிவில் மும்பை அணி 79 ரன்களை சேர்த்துள்ளது. ஆனால், இதுவரை ஒரு சிக்சரை கூட அந்த அணி அடிக்கவில்லை
மீளுமா மும்பை?

12 ஓவர்கள் முடிவில் மும்பை அனி 74 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது

11 ஓவர்கள் காலி..

11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 71 ரன்களை சேர்த்துள்ளது

சூர்யகுமார் யாதவ் அவுட்

 26 ரன்களை சேர்த்து சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்

முடிந்தது 10 ஓவர்கள்..

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 64 ரன்களை சேர்த்துள்ளது

50 ரன்களை சேர்த்த கூட்டணி

சூர்யா - வதேரா கூட்டணி 43 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது

59 ரன்கள்..

9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 59 ரன்களை சேர்த்துள்ளது

முடிந்தது 8 ஓவர்கள்

8 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 55 ரன்களை சேர்த்துள்ளது.

அரைசதம் கடந்த மும்பை..

7.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி  50 ரன்களை கடந்தது

முடிந்தது பவர்-பிளே..

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்களை சேர்த்துள்ளது 

முடிந்தது 5 ஓவர்கள்..

5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 24 ரன்களை சேர்த்துள்ளது

ஒரு வழியாக வந்தது பவுண்டரி ..

3 ஓவர்களுக்குப் பிறகு மும்பை அணி முதல் பவுண்டரி அடித்தது

4 ஓவர்கள் முடிந்தது..

4 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 19 ரன்களை சேர்த்துள்ளது

ரோகித் மோசமான சாதனை..

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை (16) டக்-அவுட் ஆன வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

3 விக்கெட்கள்..

முதல் 3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 16 ரன்களை சேர்த்துள்ளது

மீண்டும் டக்-அவுட்..

மும்பை கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

அடுத்தடுத்து விக்கெட்

7 ரன்களுக்கு நடையை கட்டினார் இஷான் கிஷன்

முதல் விக்கெட்டை இழந்த மும்பை

அதிரடி ஆட்டக்காரரான கேமரூன் கிரீன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்

ரோகித் இல்லை..

வழக்கமாக மும்பை அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கும் ரோகித்திற்கு பதிலாக, கேமரூன் கிரீன் இறங்கியுள்ளார்

முடிந்தது முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் மும்பை அணி 10 ரன்களை சேர்த்துள்ளது

மும்பை இந்தியன்ஸ் அணி: 

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், ஸ்டப்ஸ், டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


கார்த்திகேயா , ரமன் தீப் சிங், பிரேவிஸ், கோயல், விஷ்னு வினோத்

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி: 

டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, எம்எஸ் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


அம்பத்தி ராயுடு, மிட்செல் சாண்ட்னர், சேனாபதி, ரஷீத், ஆகாஷ் சிங்

சென்னை அணி பீல்டிங்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு

Background

ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.


சென்னை - மும்பை மோதல்:


ஐபிஎல் 16வது சீசன் 49வது போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 4 மணிக்கு தொடங்குகிறது.  இரு அணிகளும் முன்னதாக மோதிய முதல் போட்டியில் 158 ரன்கள் இலக்கை 18.1 ஓவர்களில் துரத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை அணி இன்று களமிறங்குகிறது.


சென்னை அணி நிலவரம்:


தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னை அணி, இதுவரை 10 போட்டிகளில் 5 வெற்றியும், 4ல் தோல்வியும் சந்தித்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான முந்தைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த்துள்ள சென்னை அணி இந்த போட்டியில் மீண்டும் எழும் என்ற நம்பிக்கையில் உள்ளது. 


மும்பை அணி நிலவரம்


மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மும்பை, கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்தனர். தொடர்ந்து, இன்றைய போட்டியில் வென்று ஹார்டிக் வெற்றியை பதிவு செய்ய மும்பை அணி தீவிரம் காட்டி வருகிறது.


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 35 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில் அதிகபட்சமாக மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 15 முறையும் வெற்றி கண்டுள்ளது.  சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் அதிகபட்சமாக சென்னை அணி 3 முறை வெற்றிபெற்றுள்ளது.   அதேநேரம், சென்னை சிதம்பரம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானமாக இருந்தாலும், ஆதிக்கம்  செலுத்துவது என்னமோ, மும்பை இந்தியன்ஸ் அணிதான். இதுவரை இந்த மைதானத்தில்  இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. அதில் 5 முறை மும்பை அணியும், 2 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி: 


டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, எம்எஸ் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மகேஷ் தீக்ஷனா, தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே


மும்பை இந்தியன்ஸ் உத்தேச அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர் ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நெஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.