பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனைகளான துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ் உள்ளிட்ட 34 பேருக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்று கேல் ரத்னா மற்றும் அர்ஜூனா விருதை அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை விருதுகள் 2024:
இந்திய விளையாட்டுத்துறையின் உச்ச விருதான கேல் ரத்னா விருது 4 பேருக்கும், அர்ஜூனா விருது 34 பேருக்கும் , பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரிய விருது 5 பேருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூனா விருது பெற்றவர்கள் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர்.
துளசிமதி முருகேசன்:
பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். 2024 ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்துள்ளது.
நித்யஸ்ரீ சுமதி சிவன்:
பேட்மிண்டன் வீராங்கனையான நித்யஸ்ரீ சுமதி சிவன், 2024 பாராலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர், கலப்பு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிஷா ராமதாஸ்:
பேட்மிட்டன் வீராங்கனையான மணிசா ராமதாஸ், 2024 பாராலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். திருவள்ளூரில் பிறந்தாலும் , தற்போது சென்னையில் வசித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
அர்ஜூனா விருது பெறுபவர்கள்:
இவர்களை தவிர, ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நிது, சாவீட்டி, வந்திகா அகர்வால், சலிமா டெட்டே, அபிஷேக், சஞ்சய், ஜர்மன்ப்ரீத் சிங், சுக்ஜீத் சிங், ராகேஷ் குமார், ப்ரீத்தி பால், ஜீவன்ஜி தீப்தி, அஜீத் சிங், சச்சின் சர்ஜராவ் கிலாரி, தரம்பீர், பிரணாபிர், பிரணாபிர் , சிம்ரன், நவ்தீப், நித்தேஷ் குமார், மனிஷா ராமதாஸ், கபில் பர்மர், மோனா அகர்வால், ரூபினா பிரான்சிஸ், ஸ்வப்னில் சுரேஷ் குசலே, சரப்ஜோத் சிங், அபய் சிங், சஜன் பிரகாஷ், அமன் உள்ளிட்டவர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருதுகளை அறிவித்து கௌரவித்துள்ளது.
Also Read: இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்நிலையில், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன் ஆகிய இருவருக்கும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கேல் ரத்னா விருதி பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஸ் இடம்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.