MIvCSK, IPL 2022 LIVE: மனதையும் வென்றார்.. போட்டியையும் பொளந்தார்... கடைசி ஓவரில் கலக்கிய தோனி
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், நான்கு முறை மற்றும் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் நிலை என்பது இந்த தொடரில் மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியில், சென்னை அணி வெற்றி பெற கடைசி 5 பந்துகளில் 17 ரன்கள் தேவை
சென்னை அணிக்காக ஒன் டவுன் வீரராக களமிறங்கிய சான்ட்னர் 11 ரன்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். இதனால், சென்னை 2வது விக்கெட்டை இழந்தது. அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு சிக்ஸருடன் ஆட்டத்தை தொடங்கினார்.
156 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் பந்திலே அவுட்டாகி சாம்ஸ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
போட்டி ஆரம்பித்து முகேஷ் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே கேப்டன் ரோஹித் ஷர்மா சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்
Background
மும்பையில் நடைபெற்று வரும் 15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், நான்கு முறை மற்றும் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் நிலை என்பது இந்த தொடரில் மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. இரு அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு என்பது இப்போது முதலே கேள்விக்குறியாக உள்ளது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றிக்கணக்கை தொடங்கவே இல்லை. ஏலத்தில் புதிய வீரர்களை எடுத்த பிறகு இரு அணியிலும் பந்துவீச்சு என்பது மிகவும் கவலைக்குரிய வகையிலே உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -